full screen background image

“சாமுத்திரிகா லட்சணத்திற்கு ஒரேயொரு உதாரணம் வைஜெயந்திமாலாதான்..” – நடிகர் சிவக்குமாரின் கணிப்பு..

“சாமுத்திரிகா லட்சணத்திற்கு ஒரேயொரு உதாரணம் வைஜெயந்திமாலாதான்..” – நடிகர் சிவக்குமாரின் கணிப்பு..

“சாமுத்திரிகா லட்சணத்திற்கு ஒரேயொரு உதாரணம் நடிகை வைஜெயந்திமாலாதான் ” என்கிறார் நடிகர் சிவக்குமார்.

மெட்ராஸ் பார் அசோசியேஷனின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக பல பிரபலங்களின் தொடர் சொற்பொழிவு சென்னை ஐகோட்டில் நடத்தப்பட்டு வருகிறது. நேற்றைய நிகழ்ச்சியில், நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, “சிறுவயதில் சிலரது முகம் அழகற்று இருக்கலாம். ஆனால் அவர்களின் நல்ல வாழ்க்கை முறையின்படி பின்னர் அழகிய முகத் தோற்றத்தைப் பெற்றனர். காந்தியடிகள், ஆபிரகாம் லிங்கன் ஆகியோர் இதற்கு நல்ல உதாரணம்.

மனிதர்களில் இரண்டு பக்க முகமும் சம அளவில் இருப்பவர்கள் அபூர்வம். ஏதாவது ஒரு பக்கத்தில் ஒரு விஷயம் இருக்கும். எனக்கும், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் இடது தாடை சற்று பெரியதாக இருக்கும். எம்.ஜி.ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் வலது தாடை சற்று பெரியதாக அமைந்திருக்கும். கடந்த அறுபதாண்டுகளில் நான் பார்த்த அளவில் எல்லா லட்சணமும், அதாவது சிலை வடிக்கும் அளவுக்கு சாமுத்திரிகா லட்சணங்கள் ஒருங்கே அமைந்த நடிகை வைஜந்திமாலாதான்.

ஒவ்வொரு நாளும் 166 முறை பிரணாயாமம் செய்தால் 166 ஆண்டுகள் வாழலாம் என்று முன்னோர் கூறியுள்ளனர். ஆனால், அது மிகவும் கடினமான விஷயம். நான் தினமும் 84 முறை பிரணாயாமம் செய்கிறேன். தினமும் காலை 4 மணிக்கு எழுந்து ஆறரை மணிவரை நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். பசித்த பின்னர் சாப்பிடும் பழக்கத்தை வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் ஆயுளில் 10 ஆண்டுகள் கூடும். அதுபோல் தினமும் 7 மணி நேரம் தூங்க வேண்டும். 5 மணி நேரம் மட்டும் தூங்கினால் இருதய நோய் வருவதற்கு 40 சதவீதமும், 3 மணி நேரம் மட்டுமே தூங்கினால் அந்த நோய் வருவதற்கு 70 சதவீதமும் வாய்ப்புள்ளது..” என்றார் சிவக்குமார்.

Our Score