மீண்டும் கவர்ச்சிப் புயலாய் மாறிய ஸ்ருதிஹாசன்..!

மீண்டும் கவர்ச்சிப் புயலாய் மாறிய ஸ்ருதிஹாசன்..!

கவர்ச்சி விஷயத்தில் அவ்வப்போது முன்னப்பின்னதான் பேசுவார்கள் நடிகைகள்.. ஸ்ருதிஹாசனும் இதற்கு விதிவிலக்கல்ல..!

shruthihasan-3

‘யெவடு’ என்ற தெலுங்கு படத்தின் ஒரு பாடல் காட்சியில் ஓவர் கவர்ச்சி காட்டி கலங்கடித்தார் ஸ்ருதி. அந்தப் பாடல் காட்சியின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியான பிறகு தனக்கே தெரியாமல்.. தன்னுடைய அனுமதியில்லாமல் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டுவிட்டதாக புகைப்படம் எடுத்த படத்தின் புகைப்படக்காரர் மீது போலீஸில் புகார் கொடுத்தார் ஸ்ருதி.

இது தெலுங்கு படவுலகத்திலும் பிரச்சினையைக் கிளப்பி.. புகைப்படக்காரரர்கள் சங்கத்தினர் பெப்சியில் புகார் கொடுக்கும் அளவுக்குச் சென்றது.. அதன் பின்பு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்கிற ரீதியில் பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுத்தார் ஸ்ருதி.

shruthihasan-2

இப்போது ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் மூத்த தாரத்து பையனான அர்ஜூன் கபூர் நடிக்கும் ‘தீவார்’ என்கிற ஹிந்தி படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு கவர்ச்சியான டிரெஸ்ஸில் படுவேகமான ஸ்டெப்பில் நடனமாடியிருக்கிறாராம் ஸ்ருதிஹாசன்.

shruthihasan-4

நல்லவேளையாக இந்தப் பாடல் காட்சியின் ஒரு புகைப்படம்தான் இப்போது வெளியாகியிருக்கிறது.. இந்தப் “பாடல் முழுக்கவே ஸ்ருதி கலக்கியிருக்கிறார்..” என்று வியந்து போய் சொல்கிறார் ஹீரோ அர்ஜூன் கபூர். ஸ்ருதியோ.. “இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை…” என்று சொல்லியிருக்கிறார்..!

புகைப்படங்கள் முழுமையாக வெளியே வரட்டும்.. அப்போ என்ன சொல்லப் போறாங்கன்னு பார்ப்போம்..!

 

Our Score