full screen background image

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்..!

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்..!

யார் கண்ணு பட்டுச்சுன்னு தெரியலை.. சிவகார்த்திகேயனுக்கு இன்னிக்கு திருஷ்டி சுத்திப் போட வைச்சுட்டாங்க…!

காலைல இருந்து ஒரே வதந்தி, வதந்தியா பரவுச்சு.. யாரோ ஒரு புண்ணியவான் பேஸ்புக்ல சிவகார்த்திகேயன் விபத்தில் மரணம்.. உண்மையான்னு ஏதோ விசாரிக்கிற மாதிரி போட்ட செய்தி, காத்துல எபோலோ வைரஸ் மாதிரி பரவி அவங்க வீட்டாரையே பதற வைச்சிருக்கு..

காலைல இருந்து ஊர் சுற்றிய வதந்தியை சாயந்தர வேளையில் தான் இப்போது இருக்கும் நார்வே நாட்டில் இருக்கும் நிலையில் கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன்.. ஊரை விட்டு வந்தும் நம்மளை நிம்மதியா இருக்கவிட மாட்டேன்றாங்களே என்று நினைத்து டிவிட்டரில் தான் உயிருடன் இருப்பதை உறுதி செய்துள்ளார்.

இது மாதிரி ஒருத்தர் செய்றதே எத்தனை பெரிய காமெடி கலந்த கொடுமை என்பது அவரவர் அனுபவிச்சாத்தான் தெரியும்..

“இங்கே.. காக்கிச் சட்டை படத்தின் ஷூட்டிங்கிற்காக வந்திருக்கிறேன்.. அனிருத்தின் இசையமைப்பிற்கு என்னால முடிந்த மரியாதை செலுத்துவேன்…” என்றும் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன்..!

சில பேருக்கு சாவுங்கிறதுகூட காமெடியாயிருச்சு..!

Our Score