இரண்டு நண்பர்கள் மீடியாக்கள் பார்க்குமிடத்தில் பேசாமல் இருந்தாலே, கதை கட்டத் தோணும்..! இதில் வளர்த்துவிட்டவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு இன்னொரு வளர்ந்தவருடன் கை குலுக்குவது என்றால் மீடியாக்களின் சந்தேகப்பார்வை சும்மா இருக்குமா..?
தனுஷ், விஜய் சேதுபதியை வைத்து படம் செய்யத் தயாரானபோது ஆஸ்தான நண்பர் சிவகார்த்திகேயனுக்கும், தனுஷுக்கும் ஏதோ முட்டிக்கிச்சு போல என்று ரவுண்டு கட்டி எழுதித் தீர்த்துவிட்டன மீடியாக்கள்..
வழக்கம் போல தனுஷ் அமைதியாக இருக்க கிடைத்த கேப்பில் சிவகார்த்திகேயன் மட்டுமே இதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இப்போதும் அப்படியே.. ஆனந்தவிகடனுக்கு அளித்திருக்கும் பேட்டியில் இதையெல்லாம் கண்டு கொள்ளக் கூடாது என்கிற தனுஷின் உத்தரவை தான் பாலோ செய்வதாகக் கூறுகிறார் சிவகார்த்திகேயன்..!
”எதிர் நீச்சல்’ படம் ரிலீஸுக்கு ரெண்டு நாள் முன்னாடி தனுஷ் சார் தயாரிப்பில் கமிட்டான படம்தான் ‘காக்கிச் சட்டை’. ‘எதிர் நீச்சல்’ சமயத்துலேயே எனக்குன்னு இருந்த வியாபாரத்தை மீறி செலவு பண்ணியிருந்தார் தனுஷ் சார். இதுலையும் அப்படித்தான்.
அவர்கூட எனக்கு என்ன மனஸ்தாபம் இருக்கப் போகுது? ‘சார், நிறையப் பேர் நமக்குள்ள சண்டையானு கேக்குறாங்க’னு சொன்னேன். ‘அப்படித்தான் கேப்பாங்க. அவங்களுக்குப் பதில் சொல்லிட்டே இருந்தா நாம வேலை பாக்க முடியாது’னு சொன்னார். ‘இல்லை சார்… ஏதாவது மறுத்துச் சொல்லிடலாம். தப்பா நினைச்சுட்டு இருக்கப் போறாங்க’னு நான் சொன்னா… ‘நாம யாருனு நமக்குத் தெரியும். அது போதும். தவிர, நீங்க சொன்னாலும் அதை உடனே நம்பிடுவாங்களாக்கும்’னு கேட்டுட்டுச் சிரிச்சார். ‘ஆமாம்ல’னு தோணுச்சு. தெளிவாகிட்டேன். ‘நாம ஒரு ஹீரோ… நமக்கும் ஒரு வியாபாரம் இருக்கு’னுலாம் நான் யோசிக்கிறதே கிடையாது. என்னைக்கும் எனக்கு தனுஷ் சார் பெருசுதான்!..”
ஓகே.. நீங்க அடிச்சு ஆடுங்க பிரதர்.. எங்களுக்கு பொழுது போகலைன்னா அப்பப்போ உங்ககிட்ட வரோம்..!