எழுத்தாளர் அஜயன்பாலா இயக்கும் ‘மைலாஞ்சி’ படத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன் ஹீரோவாக அறிமுகம்..!

எழுத்தாளர் அஜயன்பாலா இயக்கும் ‘மைலாஞ்சி’ படத்தில் ‘மெட்ராஸ்’ கலையரசன் ஹீரோவாக அறிமுகம்..!

இரண்டாம் நிலை நடிகர்களெல்லாம் ஹீரோக்கள் ஆகும் காலம் இது.

actor kalaiarasan-1

‘ஜிகர்தண்டா’ பாபி சம்ஹாவை ஹீரோவாக்கியது என்றால் ‘மெட்ராஸ்’ கலையரசனை ஹீரோவாக்கியுள்ளது.

விகடனில் வெளிவந்த ‘நாயகன்’ தொடரை எழுதியவரும், ‘உலக சினிமா’ புத்தகங்களை எழுதியவருமான எழுத்தாளர் அஜயன்பாலா சினிமா துறையில் நீண்ட, நெடிய அனுபவம் கொண்டவர்.

ajayanbala-1

பல திரைப்படங்களின் திரைக்கதை உருவாக்கத்தில் பங்கெடுத்தவர். பல திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர். சில திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியிருக்கிறார். இப்போது முதல் முறையாக ஒரு படத்தை இயக்கப் போகிறார்.

இவர் இயக்கவிருக்கும் ‘மைலாஞ்சி’ என்ற திரைப்படத்தில்தான் கலையரசன் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும் இந்தப் படத்தில் கிஷோர், ஈஸ்வரி ராவ், எழுத்தாளர் வேலராமமூர்த்தி, மதுரை முத்து மற்றும் பலரும் நடிக்கவுள்ளார்கள்.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கர்பச்சான் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கவுள்ளார். பாடல்களை நா.முத்துக்குமார் எழுதவுள்ளார். கோபி எடிட்டிங் செய்கிறார். கலை இயக்கத்தை ஆரோக்கியராஜ் மேற்கொள்கிறார்.

ரேகா மூவிஸ் சார்பில் சக்கரவர்த்தி தயாரிக்கும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், அஜயன்பாலாவும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அஜயன்பாலா.

புது ஹீரோ கலையரசனுக்கும், புதிய இயக்குநர் அஜயன்பாலாவுக்கும் நமது வாழ்த்துகள்..!

Our Score