full screen background image

சிவாஜி, கமல் வரிசையில் அடுத்தது சூர்யாவா..?

சிவாஜி, கமல் வரிசையில் அடுத்தது சூர்யாவா..?

கோடம்பாக்கத்தின் வசூல் ராஜாக்கள் லிஸ்ட்டை எடுத்தால் அது வருடத்திற்கு வருடம் மாறும்.. பரமபத விளையாட்டில் பாம்பு கொத்தி கீழே இறங்குவதை போல பல பெரிய ஹீரோக்களின் கலெக்சன் ரிப்போர்ட்டும், கேரியரும் சறுக்கு மரமாய் இறங்கி, பின்பு ஏறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் நடிப்பு விஷயத்தில்தான் இந்த கியூவே தேவையில்லை என்ற ரீதியில்தான் இருக்கிறார்கள் கோடம்பாக்கத்து பரமாத்மாக்கள்..! சிவாஜி, கமலுடன் ஒப்பிட்டால் மற்றவர்களையெல்லாம் இந்த வரிசையில் நிற்க வைக்கவே முடியாது. ஆனால் ஒரு சிலர் இப்போதைக்கு கமலுக்கு அடுத்து சூர்யாதான் என்கிறார்கள்.

இதற்கு சூர்யா என்ன சொல்கிறார் தெரியுமா..?

“இது ரொம்ப ஓவரா இருக்கு.. அப்படிச் சொல்லக் கூடாது.. சொல்லவும் முடியாது. சிவாஜி ஸார் நாடகத்துல இருந்து வந்த லெஜண்ட். அவரோட மெமரி பவர்.. அவர் ஆரம்பிச்ச வைச்ச விஷயங்கள் ஏராளம். கமல் சாரும் அப்படித்தான்.. டைரக்டர், டான்ஸர், ஸ்கிரிப்ட் ரைட்டர்.. தயாரிப்பாளர்ன்னு பல விஷயங்கள்ல இருக்குற ஒருத்தர். நான் ஒரேயொரு விஷயம்தான் பண்ணிக்கிட்டிருக்கேன். கண்டிப்பா எனக்கு முன்னாடி அவங்க பேரையெல்லாம் இன்ஷியலா போட்டுக்க முடியாது..” என்கிறார் சூர்யா.

ஓகே.. இந்தளவுக்கு விழிப்புணர்வுடன் இருப்பதற்கு சூர்யாவிற்கு நன்றி..!

நன்றி : குமுதம்

Our Score