full screen background image

நாகிரெட்டியார் நினைவு விருது வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு..!

நாகிரெட்டியார் நினைவு விருது வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு..!

‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்திற்கு மேலும் ஒரு பரிசு கிடைத்துள்ளது.

பி.நாகிரெட்டியாரின் விஜயா மருத்துவம் மற்றும் கல்வி டிரஸ்ட் வருடந்தோறும் தமிழில் வெளியாகும் சிறந்த பொழுது போக்குத் திரைப்படத்திற்கு விருது வழங்கி வருகிறது.

2013-ம் ஆண்டுக்கான சிறந்த பொழுது போக்குத் திரைப்படமாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தை இந்த விருதுக்காக தேர்வு செய்துள்ளார்களாம்.. பொருத்தமான படம்.. சிறந்த விருது..!

சென்ற ஆண்டு வெளிவந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவாயா, சூரி ஆகியோர் நடித்திருந்தனர். எம்.ராஜேஷின் கதையை பொன்ராம் இயக்கியிருந்தார். இமான் இசையமைத்திருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றிதான் சிவகார்த்திகேயனின் மார்ககெட்டை எங்கயோ கொண்டு போய்வி்டடது.. இந்தப் படத்தின் வெற்றிக்குப் பின்புதான் முதல் நிலை ஹீரோக்களின் லிஸ்ட்டில் தனக்கும் ஒரு இடத்தைப் பிடித்து உட்கார்ந்தார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்துக்கு குடுக்கலைன்னா அப்புறம் வேற எதுக்குக் கொடுக்குறது..?

படத்தின் தயாரிப்பாளரான எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதனுக்கும், இயக்குநர் பொன்ராமுக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..!  

Our Score