full screen background image

“சிம்பு பின்னாளில் பெரிய ஆளாக வருவார்” – 1990-களில் ரஜினியின் கணிப்பு..!

“சிம்பு பின்னாளில் பெரிய ஆளாக வருவார்” – 1990-களில் ரஜினியின் கணிப்பு..!

நடிகர் சிம்பு பின்னாளில் பெரிய ஆளாக வருவார்” என்று ரஜினியே சொல்லியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்புவின் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ‘மாநாடு’ படம் வரும் நவம்பர் 26-ம் தேதியன்று திரைக்கு வருகிறது.

இதையொட்டி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது, நடிகர் சிம்பு சிறு வயதில் ஆடிய நடனத்தைப் பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினி பெரிதும் பாராட்டியதாகக் குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசும்போது, “நாங்கள் ‘பணக்காரன்’ படம் எடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் பக்கத்து செட்டில் ஒரு சின்னப் பையன் பிரமாதமாக டான்ஸ் ஆடுறான் என சொன்னார்கள்.. எல்லோரும் அங்கே போய் பார்த்துவிட்டு வந்து இப்படி பாராட்டுவதை பார்த்து உடனே ரஜினி சார் ரொம்பவே ஆர்வமாகி, “வாங்க.. நாமளும் பார்த்துட்டு வரலாம்” என கூறினார்.

அங்கே குழந்தை நட்சத்திரமான சிம்புவின் நடனத்தை பார்த்து வியந்து “என்ன மாதிரி திறமையா இருக்கான் பாருங்க.. பின்னாடி பெரிய ஆளா வருவான்…” என ரஜினி அப்போதே சிம்புவைக் கணித்து பாராட்டினார்.

நானும் அப்போது இருந்து சிம்புவின் வளர்ச்சியை கவனித்து வருகிறேன்.. அவர் இன்னும் மிகப் பெரிய உயரத்திற்கு செல்வார்” என கூறினார்.

Our Score