மீண்டும் ஜோடியாக வலம் வரும் சிம்பு-நயன்தாரா..!

மீண்டும் ஜோடியாக வலம் வரும் சிம்பு-நயன்தாரா..!

கொஞ்ச நேரம் கிசுகிசு எழுதுறவங்களுக்கு ரெஸ்ட் கொடுக்கவே மாட்டாங்க போலிருக்கு இந்த சிம்பவும், நயன்ஸும்..!

இந்த ஜோடியை பத்தி எழுதி, எழுதியே டயர்டாகிட்டாங்க பத்திரிகையாளர்கள். இப்போ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாங்க..

பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா, சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டதிலிருந்து இப்போதுவரையிலும் இவர்களை பற்றி தினத்துக்கு ஒருசெய்தி வந்து குவிந்து கொண்டுதான் இருக்கிறது..

“இது ஜஸ்ட் மூவி அவ்ளோதான். அதுல சிம்பு நடிக்கிறார் அவ்ளோதான்..” என்று தெலுங்கு பத்திரிகைகளுக்கு மட்டுமே பேட்டி கொடுத்து ஹிப்பை ஏற்றி வரும் நயன்தாராவின் சமீபத்திய நடவடிக்கைகள் எதுவும் ‘அவ்ளோதான்’ என்று அப்படியே விடுவது போல இல்லையே..?

‘ராஜாராணி’ சகஸ்ஸ் பார்ட்டி, திரிஷாவின் பிறந்த நாள் பார்ட்டி இதிலெல்லாம் சிம்பவுடன் கலந்து கொண்டவர்.. ‘ஜஸ்ட் லைக் தேட் பார்ட்டி’ என்றார்.. ‘வேலையில்லா பட்டதாரி’ படத்திற்காக கொடுத்த பார்ட்டியிலும், தனுஷின் பிறந்த நாள் பார்ட்டியிலும்கூட சிம்பு, நயன்தாரா ஜோடி மறுக்காமல் ஆஜர்.

dhanush-nayanthara-simbu-aniruth

முன்பு தனித்தனியே வந்து சென்று கொண்டிருந்தவர்கள்.. இப்போது ஜோடியாகவே வரத் தொடங்கிவிட்டார்கள்.

simbu-nayanthara-2

நேற்றைக்கு முன்தினம் இரவு எஸ்கேப் சினிமா தியேட்டரில் நடந்த ‘அமரகாவியம்’ திரைப்படத்தின் பிரிமீயர் ஷோவுக்கு வந்தவர்களின் கண்ணை பறித்தது இந்த ஜோடியின் ஒன்றான வருகைதான்..!

simbu-nayanthara-3

‘இதெல்லாம் எங்க வாழ்க்கைல ரொம்ப சகஜமுங்க’ என்று மற்றவர்களுக்கு நேரிடையாகச் சொல்லாமல் உணர்த்தியிருக்கிறார்கள் இந்த நடிகரும், நடிகையும்..

இதைப் புரிந்து கொண்டு பாராக்கு பார்க்காமல் போவதுதான் நமக்கு மரியாதை..!

Our Score