full screen background image

செளந்தர்யா ரஜினியை வறுத்தெடுத்த சிம்பு ரசிகர்கள்..!

செளந்தர்யா ரஜினியை வறுத்தெடுத்த சிம்பு ரசிகர்கள்..!

நடிகர் சிம்புவுக்கும், ரஜினி குடும்பத்திற்கும் இடையே நட்பும், கசப்பும் சேர்ந்தே இருந்து வருகிறது..! காரணம் என்ன என்பது கோடம்பாக்கமே அறியும்..!

தனுஷ் தலையெடுத்த பின்பு சிம்புவுடன் அடிக்கடி நட்பு பாராட்டி வந்தாலும், இது எதற்கு என்று இன்னமும் புரியாமல்தான் இருக்கிறது மீடியா..!

‘கோச்சடையான்’ படத்தைப் பார்த்துவிட்டு ரஜினியையும், கே.எஸ்.ரவிக்குமாரையும் வெகுவாகப் பாராட்டிய சிம்பு, படத்தின் அனிமேஷன் வேலைகளை குறை சொல்லி ட்வீட் செய்தார். இதற்கு படத்தின் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த், ‘தேங்க்ஸ்’ என்று சொல்லி பஞ்சாயத்தை முடித்துவிட்டார்.

soundarya-dd

அடுத்து நேற்றைக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் டிடி என்னும் நிகழ்ச்சியில் செளந்தர்யா ரஜினிகாந்த் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் ஒரு பகுதியில் செளந்தர்யாவிடம் அவரது நண்பர்கள் யாரேனும் 5 நபர்களிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்பது போல கான்செப்ட் கொடுக்கப்பட்டது.

இதில் சிம்புவின் பெயரைத் தேர்வு செய்த செளந்தர்யா, “சிம்பு எப்போ பாடுறதை நிறுத்தப் போறீங்க..?” என்று கிண்டலாகக் கேட்டிருந்தார். இது ஒளிபரப்பானது முதலே சிம்புவின் ரசிகர்கள் கொதித்துப் போனார்கள்.

str fans twitter

இன்று காலை முதலே ட்வீட்டரில் செளந்தர்யா ரஜினிகாந்தை காய்ச்சியெடுத்தார்கள் சிம்புவின் ரசிகர்கள். ஒரு கட்டத்திற்கு மேல் ஆபாச அர்ச்சனைகளும் செளந்தர்யாவின் மீது பாய.. கடைசி நேரத்தில் களத்திற்கு ஓடி வந்தார் சிம்பு.

“ஒவ்வொருவருக்கும் மற்றவர்களைப் பற்றி கூறவும், பேசவும் உரிமை உண்டு. எனது ரசிகர்கள் யாரும், யாரையும் அவதூறாகப் பேச வேண்டாம். என்னை நீங்கள் மதிப்பதைப் போலவே, அடுத்தவர்களையும் மதிக்க வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.

இந்த ட்வீட் வெளிவந்த 2 நிமிடத்தில் லைனுக்கு வந்த செளந்தர்யா ரஜினிகாந்த், “பள்ளிப் பருவத்திலிருந்தே சிம்பு எனது மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.. நான் அந்த நிகழ்ச்சியில் பேசியது விளையாட்டிற்காகத்தான். இதனால் எங்களுக்குள் எந்த மனவருத்தங்களும் கிடையாது..” என்று ட்வீட் செய்தார்.

பிரச்சினை இத்தோடு இப்போதைக்கு நிற்கிறது..!

அவங்களே ச்சும்மா கெடந்தாலும் உசுப்பி விடுறதுக்கு, ஒரு சனமே காத்துக்கிட்டிருக்காங்க போலிருக்கு..!

Our Score