நடிகை இனியாவின் வீட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளதாம்..
இனியாவின் வீடு திருவனந்தபுரத்தில் மருதோர்கடவு என்ற இடத்தில் இருக்கிறது. நேற்று இரவு குடும்பத்துடன் செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிருந்தபோது, இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது.
வீட்டில் இருந்த 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணமும், 10 பவுன் நகையும் காணாமல் போய்விட்டதாக இனியாவின் தந்தை போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார். சமீபத்தில்தான் இனியாவின் தங்கையும், மலையாள சீரியல் நடிகையுமான சரண்யாவின் திருமணம் நடந்தது. அதற்காக வைத்திருந்த பணம்தான் அது என்று சொல்லியிருககிறாராம்..!
கொள்ளையர்களை திருவனந்தபுரம் போலீஸ் மும்முரமாக வலை வீசி தேடி வருகிறதாம்..!
Our Score