டி,ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் பட நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரித்திருக்கும் படம் ‘இது நம்ம ஆளு.’
இந்தப் படத்தில் சிம்புவுடன் நயன்தாரா. ஆண்ட்ரியா, சூரி. சந்தானம், கவுரவ வேடத்தில் ஜெய், ஆகியோரும் நடித்துள்ளனர்
இந்தப் படத்தில் சிம்பு, பிரபல தெலுங்கு பட நாயகி ஆஷா சர்மாவுடன் ஒரு பாடல் காட்சியில் நடனமாடியிருக்கிறார். டி.ராஜேந்தர் – சுசித்ரா பாடிய ‘மாமா வெயிட்டிங்’ என துவங்கும் அந்தப் பாடல் காட்சி, சமீபத்தில் பிரம்மாண்டமான அரங்கில் பல கோடி ருபாய் செலவில் படமாக்கப்பட்டது.
இந்தப் பாடலில் சிம்பு சுமார் 90 விநாடிகள் ஒற்றைக் காலில் நடனமாடியிருக்கிறார். இந்தப் பாடலை ரூபாய் 2 கோடி செலவில் மிக பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார் டி.ராஜேந்தர். இப்பாடலுக்கு டி.ஆர்.குறளரசன் இசையமைத்துள்ளார். பாண்டிராஜ் இயக்கியுள்ள இபபடத்தின் இணை தயாரிப்பு உஷா ராஜேந்தர்.
இம்மாதம் 27ம் தேதி இத்திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.