full screen background image

பரத், பிரேம்ஜி, ரமணா நடிப்பில் உருவாகி வரும் ‘சிம்பா’ திரைப்படம்

பரத், பிரேம்ஜி, ரமணா நடிப்பில் உருவாகி வரும் ‘சிம்பா’ திரைப்படம்

பரத் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், ’சிம்பா’. இதில் பிரேம்ஜியும், ரமணாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக தெலுங்கில் ஹிட்டடித்த ‘வருடு’ பட நாயகி பானு மெஹ்ராவும், இன்னுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாதி தீக்‌ஷித்தும் நடித்திருக்கிறார்கள். மேலும், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் என காமெடி நடிகர்களும் சில காட்சிகளேயானாலும் சிறப்பாக நடித்துள்ளனர்.

சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு நடித்திருக்கிறார். மிருகங்களை நேசிக்கும் ஒரு பிரபல தமிழ் சினிமா ஹீரோயினும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். அவர் யார் என்பது சஸ்பென்ஸாம்.

ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த், மலையாளத்தில் பதினைந்து படங்களுக்கு மேல் பணியாற்றியவர் ஒளிப்பதிவில் பிரத்யேக உபகரணங்களை இறக்குமதி செய்தும், புதிய உபகரணங்கள் பலவற்றை உருவாக்கியும் பயன்படுத்தும் தனித்துவமானவர்.  ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட 5 நிமிட காட்சி, 100 கேமராக்கள் கொண்டு எடுக்கப்படும் ஒரே ஷாட்  என்று வெரைட்டியாக மிரட்டியிருக்கிறார்.

இந்த ‘சிம்பா’ கதையினை பொறுத்தவரை இயக்குநருக்கும் இவருக்குமான ஒரு சிறப்பு புரிதல்தான் இந்ததிரைப்படத்தின் பலமே. கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த பல ஒளிப்பதிவு ஜாம்பவான்களில் இவர் நிச்சயமாக ஸ்பெஷல்தான். இனி இவரை தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களின் காம்பினேஷனில் நிச்சயமாக பார்க்கலாம்.  

இசை விஷால் சந்திரசேகர். ‘அப்புச்சி கிராமம்’ உட்பட விரைவில் வெளியாகவிருக்கும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்தவர். ‘சிம்பா’ கதை விவாதத்தில் ஆரம்பம் முதலே பயணிப்பவர், இயக்குநரின் நெருங்கிய நண்பர். இந்த படத்தில் இயக்குநர் தனக்குக் கொடுத்த சுதந்திரம் தன்னை முழுமையாக வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாக சந்தோஷப்படுகிறார்.

‘மெட்ராஸ்’, ‘வி.ஐ.பி.’  படங்களில் பாடலுக்கு சிறப்பாக நடனம் அமைத்த சதீஷ்  ‘சிம்பா’விலும் தனது முத்திரையை பதித்துள்ளார்.

இந்தப் படம் தயாரிப்பாளர் சிவனேஷ்வரனின் முதல் தயாரிப்பாக இருந்தாலும், அவர்  படத்திற்கு தேவையான அனைத்து தயாரிப்பு செலவுகளையும் முழு ஈடுபாடுடன் தாராளமாக செய்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் பரீட்சார்த்தமாக செய்து பார்க்கும் புதிய காட்சியமைப்புகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளார். அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கியிருக்கிறார்.

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கும் எல்லோருக்கும் அதனுடனான வாழ்க்கை, ஒரு இனம் புரியாத சந்தோஷத்தையும், மனதை எப்போதுமே குதூகலமாக வைத்திருக்கும் அனுபவத்தையும் தந்திருக்கும். மட்டுமல்ல,  அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் அவர்களுக்கே பிரத்யேகமான ஒரு மொழியியல் பரிமாற்றமும் இருக்கும்.

இதைத்தான் இந்த ’சிம்பா’ படத்தின் அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் தனது திரைக்கதையின் தனக்கே உரிய ‘BLACK COMEDY GENRE’ல் அட்டகாசமாக சொல்லியிருக்கிறார்.    

தனிமையினால் வாழ்க்கை திசைமாறி எப்போதுமே HALLUCINATION’ல் (/பிரம்மையில்/) உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும். இதை சிறப்பான காட்சியமைப்புகள் மூலம் பிரமிக்க வைக்கும்படியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். மொத்தத்தில், சிம்பா  COMPLETE STONER MOVIE.

நடிப்பு நடனம் என எல்லா திறமைகளும் சிறப்பாக கை வரப் பெற்றிருந்தாலும்  ஹீரோ பரத்திற்கு அவரது நடிப்புத் திறமையின் பன்முகத் தன்மையை வெளிக்கொணரும் இன்னொரு சாட்சியாக இந்த ‘சிம்பா’ திரைப்படம் நிச்சயம் இருக்கும்.  ‘சிம்பா’வின் வரவுக்குப் பின்னர் தமிழ் ரசிகர்கள் பரத்திற்கு தங்கள் மனதில் நிச்சயம் ஒரு புதிய சிம்மாசனம் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். 

நடிகர் பிரேம்ஜி நடித்த முந்தைய படங்களின் கதைக்களத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகள் மனதில் நிற்கும்படியான சவாலான வேடத்தை கொண்ட கதையாக ‘சிம்பா’ இருந்ததனால், அவர் ஆர்வத்துடன் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகம் இதுவரை பார்த்திராத வேறு ஒரு கோணத்தில், வேறு ஒரு தளத்தில் இருந்து இயங்கும் ‘சிம்பா’வின் கதையமைப்பு, நிச்சயம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை எல்லையை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.

தமிழ் சினிமா ரசிகர்களில் எல்லா தரப்பினரையும் திருப்திப்படுத்தும் படமாக சிம்பா அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

Our Score