இன்று ஹைதராபாத்தில் ‘வலிமை’ படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டார்.!

இன்று ஹைதராபாத்தில் ‘வலிமை’ படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டார்.!

கொரோனா பாதிப்பிற்குப் பின்னர் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட முதல் பெரிய நடிகர் என்னும் பெயரைத் தட்டிச் சென்றுள்ளார் தல’ அஜீத்.

ஹைதராபாத்தில் இன்று ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டுள்ளார் என்பதுதான் லேட்டஸ்ட் செய்தி.

இந்தப் படத்தை பிரபல ஹிந்தி படவுலக தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். எச்.வினோத் இயக்கி வருகிறார்.

கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் கார்த்திகேயா கலந்து கொண்டார்.

இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்குவதாக அறிவிக்கப்ப்டடு அங்கு ராமோஜிராவ் ஸ்டூடியோவில் செட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், அஜீத் அதில் கலந்து கொள்ளாமலேயே இருந்தார்.

ஏனெனில் சமீப நாட்களில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் துவங்கியிருந்தன. அதிலும் குறிப்பாக ஹைதராபாத்தில் வைரஸ் பரவல் இரட்டிப்பானது. இதன் காரணமாகவே ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கும் ரஜினியே வராமல் போக.. அந்தப் படத்திற்காகப் போடப்பட்டிருந்த செட்டுகளும் காத்தாடிக் கொண்டிருந்தன.

இந்த நிலையில் இன்று வலிமை’ படத்தின் படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொண்டிருக்கிறார் என்ற உண்மைச் செய்தி வெளியாகியுள்ளது. ரஜினியைும் இதில் முந்தியுள்ளார் தல’ அஜீத் என்பதால் ‘தல’யின் ரசிகர்களுக்கு இந்த நிகழ்வு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது.