full screen background image

பீட்சா படம் மிஸ் ஆயிருச்சே..! – வருத்தப்படும் சித்தார்த்..!

பீட்சா படம் மிஸ் ஆயிருச்சே..! – வருத்தப்படும் சித்தார்த்..!

ஒரு வெற்றிப் படத்தை பார்த்தவுடன் பாராட்டும் ஹீரோக்களின் மனதில் தாங்கள் இதில் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அந்தப் படம் உண்மையிலேயே அந்த ஹீரோவை நினைத்துத்தான் துவக்கப்பட்டது என்பது தெரிந்தால் அது அவர்களுக்கே எவ்வளவு பெரிய ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கும்..? அப்படித்தான் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘பீட்சா’ படம் நடிகர் சித்தார்த்துக்கு அதிர்ச்சி ப்ளஸ் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.

இது தொடர்பாக ‘குமுதம்’ பத்திரிகைக்கு சித்தார்த் அளித்திருக்கும் பேட்டியில் “பீட்சா’ இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் என்னை மனசுல வைச்சுத்தான் அந்தக் கதையையே யோசிச்சிருந்திருக்கார். ஆனா நான் கமர்ஷியலா வேற லெவல்ல இருந்ததால என்னை ரீச் பண்ண முடியுமா..? ஒரு சாக்லெட் ஹீரோ இந்த மாதிரி கதையை கேட்பாரான்னு ஆயிரம் டவுட் அவருக்குள்ள இருந்திருக்கு. அதுனால அவர் என்னை கேக்காம விட்டுட்டாரு.. அந்தக் கதையும் என்கிட்ட வரவே இல்லை..

இது எப்ப எனக்குத் தெரிஞ்சதுன்னா… நான் ‘பீட்சா’ பார்த்திட்டு ‘சூப்பரான ஸ்டோரி’ன்னு ட்வீட் பண்ணியிருந்தேன். அதுக்கு ‘தேங்க்ஸ்’ சொல்ல வந்த கார்த்திக் சுப்புராஜ் அப்பத்தான் இந்த விஷயத்தையே என்கிட்ட சொன்னார்..

‘ஓகே.. பரவாயில்லை.. இனிமேலாச்சும் எனக்கு ஒரு கதையை தயவு செஞ்சு சொல்லுங்க’ன்னு கேட்டேன். அப்படி அமைஞ்ச சாய்ஸ்தான் ‘ஜிகர்தண்டா’..

இப்ப சொல்லுங்க.. இந்த வாய்ப்பு வந்தது லக்கா..? இல்ல உழைப்பா..? இல்ல டைமா..? சாமர்த்தியமா..? காட் கிரேஸா..? எல்லாமே கொஞ்சம், கொஞ்சம் கலந்திருக்கு..” என்றார் சித்தார்த்..!

Our Score