மீடியாக்களுக்கு ‘பெப்பே’ காட்டிய சித்தார்த்-சமந்தா ஜோடி..!

மீடியாக்களுக்கு ‘பெப்பே’ காட்டிய சித்தார்த்-சமந்தா ஜோடி..!

நடிகர் சித்தார்த் ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் மாதிரி.. நான் ஸ்டாப்பாக பேசுவதில் வல்லவர். கல்லூரியில் பேராசிரியாக வேலைக்கு போயிருக்க வேண்டியவர். கொஞ்சம் அழகாக இருந்ததால் சினிமா ஆசை வந்து கோடம்பாக்கத்திற்குள் நுழைந்துவிட்டார்.

அவர் சம்பந்தப்பட்ட பட விழா என்றால், இவர் ஒருவரே ஒரு மணி நேரம் பேசுவார். கையில் குறிப்பெதுவும் இல்லாமலேயே ‘காவியத் தலைவன்’ பட விழாவில் இவர் பேசிய பேச்சு.. கேட்டு மாளவில்லை.. அன்றைக்கு இயக்குநரைவிட அதிகம் பேசியவர் இவர்தான்.. இன்றைய ‘எனக்குள் ஒருவன்’ பட விழாவிலும் இதேதான் நடந்தது.

ஆனால் சித்தார்த் சொல்லாமலேயே சொன்ன விஷயம் ஒன்றும் பத்திரிகையாளர்களை கவர்ந்தது. அது சமந்தாவுடனான தனது காதல் தொடர்கிறது என்பதுதான்..!

‘அஞ்சான்’ படத்தில் சமந்தா அளவுக்கு மீறிய கவர்ச்சியை காட்டியதால் சித்தார்த் அவருடனான காதலுக்கு குட்பை சொல்லிவிட்டதாகவும், சமந்தாவும் இது பற்றி கவலையில்லாமல் சி்ததார்த்தின் வீட்டில் இருந்து வெளியேறியதாகவும் பரபரப்பு செய்திகள் பரவியிருந்தன.

இதனை மறு பிரசுரம் செய்த வகையிலேயே 200 முறை இந்தச் செய்தி பல்வேறு தளங்களில் பிரசுரிக்கப்பட்டன. உண்மையில் அதுதான் நடந்திருக்குமோ என்றெல்லாம் சந்தேகங்கள் வந்து கொண்டிருக்க..

இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்ற ‘எனக்குள் ஒருவன்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு சித்தார்த், சமந்தாவுடன் ஜோடியாக வந்து அனைத்துக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

சித்தார்த் விழா மேடையில் பேசும்போது ‘எனக்குப் பிடித்த சமந்தா’ என்றே குறிப்பிட்டார். சமந்தா பேசும்போது ‘சித்தார்த்துக்கு எப்போதுமே சினிமா நினைப்புதான்’ என்றார். இப்படி இருவருமே பல்லாங்குழி ஆடிக் கொண்டிருக்க.. ‘இனிமேல் இது பற்றி நீங்கள் எதுவுமே எழுதக் கூடாது’ என்று மறைமுகமாக மீடியாக்களுக்கு சொல்வது போல இருந்தது இருவரின் நடவடிக்கைகள்..!

எப்படியோ ரெண்டு பேரும் நல்லாயிருந்தா சந்தோஷம்தான்.. நமக்கென்ன பொறாமையா..? என்ன ஒரேயொரு பிரச்சினை. காதல்ன்னா ஆமாம்ன்னு சொல்லிட்டு போயி்ட்டா நாளைல இருந்து ‘சித்தார்த்தின் காதலியான நடிகை சமந்தா’ன்னோ.. ‘சமந்தாவின் காதலரான நடிகர் சித்தார்த்’தோன்னு எழுதிட்டுப் போய்க்கிட்டே இருக்கலாம்..! இதையும் சொல்ல மாட்டேன்றாங்க..

இ்ன்னும் எத்தனை நாளைக்குத்தான் கிசுகிசுவாவே இந்த மேட்டரை எழுதறது..? எங்களுக்கும் போரடிக்குதுல்ல..?!

Our Score