‘சித்தார்த்’ என்ற புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பிரசாத் லேபில், இன்று காலை 11 மணிக்கு மிக எளிய முறையில் பூஜையுடன் துவங்கப்பட்டது.
இப்படத்தை எபிக் தியேட்டர் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஹரிஹரன் தயாரிக்கிறார்.
நாயகியாக புதுமுகம் ராஷ்(Razz) நடிக்கிறார். நாயகி ராஷ் youtube-ல் அனைவராலும் ‘புனிதம் கேர்ள்’ என்று அழைக்கப்படுபவர். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவுள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜூட் ரொமாரிக் (jude Romaric). இணை தயாரிப்பு – தனபால் கணேஷ், ஒளிப்பதிவு – லோகநாத் சஞ்சய், இசை – ஜே.டி., படத் தொகுப்பு – தியாகு, பத்திரிகை தொடர்பு – எம்.பி.ஆனந்த்.
இப்படம் பற்றி இயக்குநர் பேசும்போது, “இது ஒரு ஆக்ஷன் திரில்லர் வகையைச் சார்ந்த படம். ‘ஆசையே எல்லா அழிவுக்குமான காரணம் என்ற கருத்தின் விழிப்புணர்வினைப் பெறுதல். அறிதல். புரிந்து கொள்ளுதல்’ ஆகிய மூன்றையும் திரைக்கதையாக கொண்டு இப்படம் உருவாகிறது…” என்றார்.