full screen background image

“சொட்டைத் தலை இருந்தால் கல்யாணமாகாதா?” – ஹீரோ எழுப்பிய கேள்வி!

“சொட்டைத் தலை இருந்தால் கல்யாணமாகாதா?” – ஹீரோ எழுப்பிய கேள்வி!

Adler Entertainment தயாரிப்பில்,  இன்றைய தலைமுறையின் கதையில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”.

இப்படத்தில் நாயகனாக நிஷாந்த் ரூஷோ நடிக்கிறார். ஜோடியாக பிக்பாஸ் வர்ஷிணி, அறிமுக நடிகை ஷாலினி நடிக்கின்றனர். 

மும்பையில் நடிப்பு மற்றும் திரைக்கதை படித்த, நவீன் s ஃபரீத் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘கலக்கப் போவது யாரு’ புகழ் ராஜா இப்படத்திற்குக் கதை வசனம் எழுதியுள்ளார்.

தயாரிப்பு நிறுவனம் –  Adler Entertainment, இயக்கம் – நவீத் s ஃபரீத் (debute), திரைக்கதை வசனம் – கலக்கப்போவது யாரு புகழ் ராஜா,
இசை – ரெஞ்சித் உன்னி, ஒளிப்பதிவு – ரயீஷ், படத்தொகுப்பு – ராம் சதீஷ்,
கலை இயக்கம் – ராம்குமார், 
நடனம் – அப்சர், பத்திரிக்கை தொடர்பு – ராஜா.

இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களும்தான் இப்படத்தின் மையம்.

அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள,  இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக் குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் நடிகர் ஆனந்த் பாண்டி பேசும்போது, “எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி.

எனக்கு இதில் வித்தியாசமான ஒரு கேரக்டர். சாதா ஹீரோவாக இருந்த என்னை, பான் இண்டியன் ஹீரோவாக மாற்றிவிட்டீர்கள். இப்படத்தில் எல்லோரும் செம்மையாக நடித்துள்ளனர். பாடல்கள் எல்லாம் அருமையாக உள்ளது. எல்லோரும் குழந்தைகளோடு ஃபேமிலியாக இப்படத்தைப் பாருங்கள்..” என்றார். 

நடிகை வர்ஷிணி வெங்கட் பேசும்போது, ‘இப்படத்தில் முடி எவ்வளவு முக்கியம் என்றும் அதே நேரம்  எவ்வளவு முக்கியம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறோம். எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர், தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. நாயகி ஆகும் கனவு, இந்தப்படம் மூலம் நனவாகியுள்ளது. இப்படத்தின் ஷீட்டிங் ஸ்பாட் மிக கலகலப்பாக இருக்கும். எல்லோரும் கேரக்டராக, கலக்கலாக நடித்துள்ளனர். ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்தது. எல்லோரையும்  தியேட்டரில் சந்திக்கிறோம். பல புதுமுகங்கள்  பணியாற்றியிருக்கும் படம்,  புதிய முயற்சிக்கு  உங்கள் ஆதரவைத் தாருங்கள்..” என்றார்.

நடிகை ஷாலினி பேசும்போது, 
“எனக்கு வாய்ப்பு தந்த குழுவிற்கு நன்றி. என்னை ஷீட்டிங்கில் எல்லோரும் மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். ஷீட்டிங் மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

கலக்கப் போவது யாரு புகழ் ராஜா பேசும்போது, ‘கலக்கப் போவது யாரு ஆரம்பித்து 6,7 வருடமாக தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறேன். எல்லோருக்கும் இருக்கும் கனவு வெள்ளித்திரையில் தெரிய வேண்டும் என்பதுதான். இப்போது அது நிறைவேறியுள்ளது. இயக்குநர் நவீத் அவரால்தான் இது சாத்தியமானது. எல்லா பிரஸரையும் அவர் எடுத்துக்கொண்டு, எங்களை ஈஸியாக வைத்துக்கொண்டார். படத்தை வெறும் 18 நாட்களில் முடித்தோம். அவரால்தான் இது நடந்தது. எல்லோரும் இணைந்து உழைத்ததால்தான் இது சாத்தியமானது. இந்தப் படத்தில் நான்  நடித்திருக்கிறேன், வசனம் எழுதியுள்ளேன், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். இந்தப் படம் குடும்பத்தோடு ரசிக்கும்படியான படமாக இருக்கும். விஜய் டிவி திறமைகள்  பல பேர் இதில் வேலை பார்த்துள்ளனர். எனக்காக வந்த நண்பர்களுக்கு நன்றி. ரஞ்சித் உன்னி அழகான பாடல்களைத் தந்துள்ளார். இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி…’ என்றார்.

நடிகை ரியா பேசும்போது, “எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய இயக்குநர் தயாரிப்பாளர் எல்லோருக்கும் நன்றி. நன்றியைத் தவிர பெரிதாக எதுவும் சொல்ல தோணவில்லை. ராஜா சார் பேப்பரே இல்லாமல் மொத்த சீனையும் மனதிலிருந்தே சொல்வார். இயக்குநர் மிக அற்புதமாகக் காட்சிகளை எடுத்து விடுவார். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி…” என்றார்.

நடிகர் நிஷாந்த் ரூஷோ பேசும்போது, “எனது ஐந்தாவது படம் இது.  எனக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து வரும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்தக்கதையைக் கேட்டவுடன் சொட்டையை வைத்து ஒரு கதை, எப்படி அந்த வலியைச் சொல்ல முடியும் என்று தோன்றியது. இயக்குநர் நவீத் நிஜ வாழ்க்கையில் சொட்டையாய் இருப்பவர்களைப் பார்க்கச் சொன்னார். என் உறவுகளில் அப்படி சிலரைச் சந்தித்தபோதுதான் அவர்களது வலி புரிந்தது. அப்போதுதான் கதையின் வலிமை புரிந்தது. சொட்டை என்பது இயற்கைதான். ஆனால் அதைக் குறையாகச் சொல்லி,  இப்போது அது அவர்களது வாழ்க்கையையே பாதிக்கிறது. எங்கள் படம் பார்த்தால், சொட்டைத் தலையை இனிமேல் யாரும் மோசமாக நடத்த மாட்டார்கள். இப்படம் உங்கள் மனதை மாற்றும். இப்படத்தில் கூட நடித்த அனைவரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். படத்தில் கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் எல்லோரும் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள். அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி…” என்றார்.

நடிகை பிரியங்கா நாயர் பேசும்போது, “எனது முதல் படம் இது. என்னைத் திரையில் பார்க்கப் போகிறேன் என ஆவலாக உள்ளேன். இயக்குநர் எனக்கு கால் செய்து ஒரு பாடலில் கேமியோ இருக்கிறது நடிக்க வேண்டும் என்றார். ஷீட்டிங் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவரும் ஆதரவு தாருங்கள்..”என்றார். 

நடிகர் ரோபோ சங்கர் பேசும்போது,
“என் வளர்ச்சியில் பத்திரிக்கை நண்பர்கள் ஆதரவு மிகப் பெரியது அவர்களுக்கு நன்றி. இது என் ஜாதிக்காரன் படம், அது வேறேதுமில்லை நகைச்சுவை ஜாதிதான். முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம் இது. நீங்கள் ரசித்துச் சிரிக்கும் படமாக இப்படம் இருக்கும். இயக்குநர் நவீத் S ஃபரீத் அவ்வளவு அருமையாக இயக்கியுள்ளார். 5 படம் நடித்த ஹீரோ, தன் இமேஜை உடைத்து மேடைக்கும் அதே கெட்டப்பில் வருவது மிகப் பெரிய விசயம். அவருக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். கல்லூரி வினோத் மிகச் சிறந்த எழுத்தாளன். அவன் சீக்கிரம் படம் இயக்க வேண்டும். விரைவில் நான் இயக்கும் படத்தில் கலக்கப்போவது யாரு ராஜாவும், வினோத்தும் பணியாற்றுவார்கள். அனைவருக்கும் நன்றி..” என்றார்.

இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி பேசும்போது, எனது ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ படம் பார்த்து இயக்குநர் நவீத் இந்தப் படத்திற்காக என்னை ஓப்பந்தம் செய்தார்.

ஒரு காட்சியை சொல்லி பாடல் கேட்டார். நான் தந்த பாடல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு டியூன் அனுப்பிய உடனே அது பிடிக்கிறதா? இல்லையா? என உடனே சொல்லிவிடுவார். அதனால் வேலை பார்ப்பது மிக ஈஸியாக இருந்தது. பாடல்கள் எல்லாம் உங்களுக்குப் பிடிக்கும். என்னை மாதிரி புது இசையமைப்பாளருக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்..” என்றார்.

நடிகர் கல்லூரி வினோத் பேசும்போது, “சொட்ட சொட்ட நனையுது ஒரு பயஙகரமான லவ் சாங் லிரிக்சை, முழுக்க முழுக்க காமெடியா மாற்றி வைத்திருக்கிறார்கள். புரடியூசர் பார்க்கும்போது எல்லார் முகத்திலயும் அவ்வளவு சந்தோசம் இருக்கும். இந்த விழாவை ஆடி மாத விழா மாதிரி மாத்தின ரோபோ சங்கர் அண்ணாவுக்கு நன்றி. விழாவுக்கு வர யோசிக்கிற ஹீரோ இருக்க இன்ட்ஸ்ட்ரில சொட்டைத் தலை கெட்டப்போட வந்திருக்கும் ஹீரோ ரூஷோவுக்கு வாழ்த்துக்கள். என் தம்பி கலக்கப் போவது ராஜாவுக்கும் வாழ்த்துக்கள். படத்தில் உழைத்த அத்தனை கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு தாருங்கள்…” என்றார்.

Adler Entertainment  சார்பில் அசார் பேசும்போது, “நானும் நவீத்தும் தியேட்டர், தியேட்டராக  படம் பார்க்க அலைந்திருக்கிறோம். அவன் கதை சொல்வான். நான் எழுதுவேன். அவன் 10 வருட கனவு இப்போது தான் நனவாகியுள்ளது. இது மிகப் பெரிய பயணம். நிஷாந்தை எனக்கு 6 வருடங்களாகத் தெரியும். எங்களிடம் இருந்த மொத்த பணத்தையும் உழைப்பையும் போட்டு இப்படத்தை எடுத்துள்ளோம். அடுத்து ஒரு பெரிய திட்டம் வைத்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள்..’என்றார். 

இயக்குநர் நவீத் S ஃபரீத் பேசும்போது, “இது எனக்கு முதல் மேடை. பதட்டமாக உள்ளது. யார்க்கர் என ஒரு படம் எடுக்கலாம் என்றுதான் முதலில் ஆரம்பித்தோம், ஆனால் அதற்கான ஃபண்ட் கிடைக்கவில்லை. அதனால் முதலில் ஒரு காமெடி படம் செய்யலாம் என நினைத்தோம். Adler எங்கள் கம்பெனிதான். அதில் பல பிஸினஸ்களை செய்து வருகிறோம், படம் செய்யத்தான் அந்த கம்பெனியே நடத்தி வருகிறோம். இப்போதைக்கு ஒரு படம் பண்ணலாம் என ஆரம்பித்து இந்தப் படம் வந்துள்ளது. 10 நாள் ஷீட்டிங் நடத்தத்தான்  எங்களிடம் பணம்  இருந்தது. அதை வைத்துதான் படத்தைத் துவக்கினோம். 18 நாளில் இந்தப் படத்தை முடித்தோம். அப்பாவை நடிக்க வைத்து அவரிடம் பணம் வாங்கி படத்தை எடுத்தோம். அம்மா நகையையும் அடகு வைத்து விட்டேன். Generous Entitlement டீசர் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள். உடனே அவர்களை படத்தை ரிலீஸ் செய்ய வைத்துவிட்டோம். நிஷாந்தை ஓகே செய்து விட்டுத்தான் கதை எழுதினோம். படத்தை முடித்து விட்டோம். ரோபோ அண்ணன் 4 நாள்  கால்ஷீட் தந்தார். எங்களுக்காக நடித்து தந்துள்ளார். ஷாலினிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. வர்ஷிணி ஏற்கனவே 4 படம் கமிட்டாகிவிட்டார். ரெஞ்சித் உன்னி படம் எடுக்கும் முன்னாலேயே 4 பாடல் போட்டு தந்துவிட்டார். கேமராமேன் ரயீஷ் கடைசியாகத்தான் வந்தார். முழு ஆதரவாக இருந்தார். படத்தில் எல்லோரும் பணத்தை யோசிக்காமல் உழைத்தார்கள். எல்லோருக்கும் நன்றி. நல்ல படம் எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி…” என்றார்.

தயாரிப்பாளர் C.V.குமார் பேசும்போது, “நிஷாந்த் நடித்த பன்றிக்கு நன்றி சொல்லி படம் பார்த்தபோது, ரொம்பவும் பிடித்திருந்தது. அந்தப் படம் என் மூலம் ஞானவேல் ராஜா ரிலீஸ் செய்து நன்றாகப் போனது. அதே போல் இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். இயக்குநர் நவீன், கூல் என சொல்கிறார்கள் உண்மையில் அப்படி இருக்க முடியாது. படத்தை மிக அழகாக எடுத்துள்ளார். நடித்தவர்களும் நன்றாக நடித்துள்ளனர். சினிமாவை நேசிப்பவர்களை சினிமா விடாது. சினிமாவில் நீங்கள் நன்றாக வருவீர்கள் வாழ்த்துக்கள்…” என்றார்.

இப்படத்தின் உலகளாவிய விநியோக உரிமையை  Generous Entitlement  நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Our Score