தென்னிந்திய சினிமாவில் மிகப் பெரும் புகழ் பெற்ற அடல்ட் ஸ்டாரான நடிகை ஷகிலாவின் வாழ்க்கைக் கதை தற்போது அவருடைய பெயரிலேயே திரைப்படமாக உருவாகியிருக்கிறது.
தயாரிப்பாளர்கள் ஷம்மி நன்வானி, சரவண பிரசாத் இருவரும் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார்கள்.
இப்படத்தில் ரிச்சா சத்தா ஷகிலாவின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், பங்கஜ் திரிபாதி, எஸ்தர் நொரான்கா, ராஜீவ் பிள்ளை, ஷீவா ரானா, கஜோல் சக் மற்றும் சந்தீப் மலானி நடித்துள்ளார்கள்.
சந்தீப் மலானி அஸோசியேட் புரொடியூசராக பணிபுரிந்துள்ளார். சந்தோஷ் ராய் பதாஜே ஒலிப்பதிவு செய்ய, பல்லு சலூஜா படத் தொகுப்பு செய்துள்ளார்.

படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. டைட்டில் பாடலுக்கு பாலிவுட் இசையமைப்பாளர் Meet Bros இசையமைத்துள்ளார். மற்ற இரண்டு பாடல்களுக்கு இசையமைப்பாளர் வீர் சமர்த் இசையமைத்துள்ளார். இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் இந்திரஜித் லங்கேஷ்.
ஷம்மியின் Magic Cinema, Innovative Film Academy மற்றும் பழனியின் International Media Works நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை வழங்குகிறது.
1990-களில் இளைஞர்களின் நெஞ்சங்களை வென்ற நாயகியாக, வயது வந்தோருக்கான படங்களில் நடித்து, தனக்கென பெரும் ரசிகர் வட்டத்தை சேர்த்து, புகழ் பெற்றவர்தான் நடிகை ஷகிலா.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் அந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவரது படங்கள் வெளியானது. அப்போது வெளியாகும் முன்னணி நாயகர்களின் படங்களுக்கே அப்படங்கள் பெரும் சாவாலாக இருந்தது.
நடிகை ஷகிலாவின் அந்த வலி மிகுந்த வாழ்க்கையை, செக்ஸ் படங்களில் நடித்ததற்காக, சொந்தக் குடுபம்த்தினராலேயே புறக்கணிக்கப்பட்டதை, சினிமா உலகத்தினரே அவரது படங்கள் தடை செய்யப்படவேண்டுமென போராடியதை என அவரது வாழ்வின் அனைத்து பக்கங்களையும் இத்திரைப்படம் கூறவுள்ளது.
படத்தின் பெரும்பகுதி பெங்களூருவின் Innovative Film City-யில் படமாக்கப்பட்டுள்ளது. சில காட்சிகளில் கேரளாவின் இயற்கை எழில் கொஞ்சம் பகுதிகள் போன்று இருக்க வேண்டுமென்பதால் கர்நாடகாவின் தீர்த்தஹல்லி பகுதிகளிலும் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படம் நேரிடையாக இந்தி மொழியில் எடுக்கப்பட்டது. இப்போது ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
மலையாள பதிப்பு கேரள மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்னர் வெளியிடப்படும்.
படத்திற்கு சென்சாரில் A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் சென்சார் ஃபோர்ட் கமிட்டியால் இப்படம் பாராட்டினைப் பெற்றுள்ளது. இப்படத்தின் கருத்துக்களை பாராட்டி படத்திற்கு தங்களின் நன்மதிப்பை வழங்கியுள்ளனர் சென்சார் அதிகாரிகள்.
இப்படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் 2020 டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகிறது.
Zee Music நிறுவனம் இப்படத்தின் ஆடியோ உரிமையை பெற்றுள்ளது.
UFO Moviez நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.