‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா..?

‘சூது கவ்வும்’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதா..?

2013-ம் ஆண்டில் வெளிவந்த பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டான திரைப்படம் ‘சூது கவ்வும்’. தயாரிப்பாளர் சி.வி.குமாரின் தயாரிப்பில் விஜய் சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி நடித்திருந்த இந்தப் படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.

இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருமா.. வராதா என்று கடந்த சில ஆண்டுகளாகவே நலன் குமாரசாமியிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. ‘கதை ரெடி.. நடிக்கவிருக்கும் நட்சத்திரங்களை தேடி வருகிறோம்’ என்று கடைசியான ஒரு பேட்டியில் நலன் குமாரசாமி கூறியிருந்தார்.

இப்போது படத்தின் இரண்டாம் பாகம் தயாராவது உறுதியாகிவிட்டது. இந்த இரண்டாம் பாகத்தில் நாயகனாக விஜய் சேதுபதியே நடிக்கிறார். அவருடன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ் தேர்வாகியிருக்கிறாராம். படத்தின் கதையைக் கேட்ட சத்யராஜ் அசந்துவிட்டாராம். “அற்புதமான கதை…” என்று புகழ்கிறார் சத்யராஜ்.

படம் பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.