‘சார்ப்’ படத்தின் முதல் போஸ்டரை தொல்.திருமாவளவன் வெளியிட்டார்

‘சார்ப்’ படத்தின் முதல் போஸ்டரை தொல்.திருமாவளவன் வெளியிட்டார்

N.S.G.சந்தோஷ் மூவிஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் என்.எஸ்.ஜி.கணேஷ் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘ஷார்ப்’.

இந்தப் படத்தில் நாயகனாக அதின் நடிக்கிறார். இவருக்கு இது இரண்டாவது படம். சாய் தினா மற்றும் யோகிராம் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் என்.எஸ்.கணேஷ், மணிமாறன், பிராணா, சதிஷ், கல்லா பிரதீப் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை – N.S.கணேஷ், இயக்கம் – ஜே.தமிழ்செல்வன், ஒளிப்பதிவு – ராஜ்குமார், இசை – டைசன் ராஜ், படத் தொகுப்பு – கம்பம் மூர்த்தி, கலை இயக்கம் – விஜய் பிரகாஸ், சண்டை இயக்கம் – டேஞ்சர் மணி, விளம்பர வடிவமைப்பு – மணிகண்டன், தயாரிப்பு – N.S.கணேஷ், உதவி இயக்குநர்கள் – சிவா, கார்த்தி, அருண்பாண்டியன், ராஜேஸ் வீரமணி, பாடல்கள் – கானா புன்னியர், நடன இயக்கம் – ஸ்ரீஅர்ச்சனா, மக்கள் தொடர்பு – பிரியா.

sharp-movie-poster-1

உலகிலுள்ள ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் அன்றாட வாழ்க்கை, பழக்க வழக்கங்கள் இவற்றை நிதர்சனம் மாறாமல் இயல்பாக படமெடுக்கும் இயக்குநர்கள் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் சென்னை மக்களின் வாழ்வியல், அந்த வாழ்வியலுக்குள் இருக்கும் நுட்பமான அரசியல், அந்த நுட்பமான அரசியலுக்குள் இருக்கும் ரவுடியிசம் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களையும் முன் வைப்பதுதான் இந்த ‘ஷார்ப்’ திரைப்படமாகும்.

சென்னை மக்களின் வாழ்க்கையை யதார்த்தம் மாறாமல் காண்பிக்கும் நோக்கத்தோடு படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநரான ஜே.தமிழ்செல்வன்.

ரவுடியிசத்தை மையப்படுத்திய படம் என்பதால் சண்டை காட்சிகளை மிக இருக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.

விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் முதல் பார்வையை விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் சமீபத்தில் வெளியிட்டார்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது.

Our Score