விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்த செந்தில், ஸ்ரீஜா இருவருமே நிஜ வாழ்க்கையிலும் திருமணம் செய்து கொண்டார்களாம்.
இவர்களது சீரியல் திருமணத்தையே நிஜ திருமணம் போல நடத்திய விஜய் டிவிகூட இவர்களது திருமணம் பற்றிய செய்தியை வெளியிட முடியாமல் போனது சோகம்தான்..!
விஜய் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்பை பெற்ற இத்தொடரில் சரவணனாக மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக ஸ்ரீஜாவும் நடித்திருந்தனர். தமிழக டிவி நேயர்கள் மத்தியில் ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலமாக இருவருமே பிரபலமாக வலம் வந்தனர்.
இவர்கள் திருமணம் செய்ய இருப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் இருவருமே அச்செய்திகளை முதலில் மறுத்து வந்தார்கள். சமீபத்தில்தான் செந்தில் மீது சரவணன் மீனாட்சியின் தொடரில் தற்போது நடித்துவரும் மலேசிய நடிகை ஒருவர், கடுமையான புகார்களை அடுக்கியிருந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் திருப்பதியில் செந்தில், ஸ்ரீஜா இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. செந்திலின் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டதாகத் தெரிகிறது.
செந்தில் இப்போது ‘பப்பாளி’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.