full screen background image

நட்டி நட்ராஜின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா

நட்டி நட்ராஜின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா

விடியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் கா.செந்தில்வேலன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘சீசா’.

இந்தப் படத்தில் நாயகர்களாக நட்டி நடராஜ் மற்றும் நிஷாந்த் ரூசோ நடிக்கின்றனர். நாயகியாக பாடினி குமார் நடிக்க, இவர்களுடன் நிழல்கள் ரவி, ஜீவா ரவி மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு பெருமாள் மற்றும் மணிவண்ணன், ஹாரிஸ் ஜெயராஜ் இடம் பணிபுரியும் சரண்குமார் இசையமைக்க, தயாரிப்பாளர் டாக்டர் கா.செந்தில்வேலன் கதை எழுத, குணா சுப்பிரமணியம் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார்.

புதுமையான கதைக் களத்தில், கிரைம் திரில்லராக விரைவில் வெளிவர இருக்கும் இந்த “சீசா” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை, இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.

Our Score