full screen background image

“ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு ‘சீமராஜா’வில் கிடைத்தது” – கலை இயக்குநர் முத்துராஜ்

“ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு ‘சீமராஜா’வில் கிடைத்தது” – கலை இயக்குநர் முத்துராஜ்

கிராமப்புற திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்காது, மிகவும் எளிதாக இருக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். பச்சைப் பசேலென வயல் வெளிகள், அமைதியான ஏரிகள், தெளிவான சிற்றோடைகள்,  வண்ண மயமான திருவிழாக்கள், இனிமையான குயில் சத்தம் ஆகியவை மட்டுமே கிராமத்து படங்களின் ஆதாரம் என்ற நினைப்பு இருக்கிறது.

ஆனால் உண்மையில், இதற்கெல்லாம் தொழில் நுட்பக் குழுவின் இமாலய உழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக ‘கலை இயக்குநர்’ பங்கு அதிகமாக தேவைப்படுகிறது. ஒரு ‘திருவிழா’ படம் என்று சாதாரணமாக சொல்லி விடலாம். ஆனால், அந்தத் திருவிழா அனுபவத்தை திரையில் கொண்டு வருவது மலையை இழுப்பதற்கு சமம்.

சிவகார்த்திகேயன்-சமந்தா நடித்துள்ள ‘சீமராஜா’ படத்தில் கலை இயக்குநர் முத்துராஜின் உழைப்பு அபரிமிதமானது.

seemaraja-movie-poster-2

சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன், சூரி, நெப்போலியன், லால் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்கியிருக்கிறார். டி.இமானின் இசையில், பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், 24 AM STUDIOS நிறுவனத்தின்  சார்பில் மிக பிரமாண்டமான செலவில் தயாரித்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

‘சீமராஜா’ படத்தின் ட்ரைலர் மற்றும் காட்சிகள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் இந்தப் படத்தின் கலை இயக்குநரான முத்துராஜ் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு தன் நன்றியை தெரிவித்துள்ளார்.

art director muthuraj

இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி முத்துராஜ் கூறும்போது, “சீமராஜா’ படத்தில் என் வேலை நன்கு  கவனிக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சாரின் ஒளிப்பதிவுதான். அவர் என் கலை வேலையின் ஒவ்வொரு நுணுக்கமான விஷயங்களையும் ரசித்தார். அவர் படப்பிடிப்புக்கு முன்பே வாட்ஸப்பில் என் பரிந்துரையையும் கேட்பார்.

பொதுவாக, ஒரு கிராமத்து படம் பண்ணும்போது அதன் தயாரிப்பாளருக்கு ஆர்ட் டிபார்ட்மெண்ட் மீது ஒரு கண் இருந்து கொண்டேயிருக்கும். பெரும்பாலும் எங்கள் வேலை கோயில் திருவிழா அல்லது மார்க்கெட் உருவாக்குவதோடு நின்று விடும். ஆனால் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா ஸார், என் கற்பனை திறனை வெளிப்படுத்த எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.

சில நேரங்களில், நான் செலவை மனதில் வைத்து சமரசம் செய்து கொண்டாலும், படம் நன்றாக வருவதற்கு என்னை ஊக்குவிப்பார். மேலும், பொன்ராம் சாரின் கிராமப்புற வாழ்க்கையை மிகவும் வண்ண மயமாக வழங்கும் நோக்கம் என்னை இன்னும் பரிசோதனை செய்ய தூண்டியது. இப்படி இயல்பாகவே ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு ‘சீமராஜா’வில் எனக்கு கிடைத்தது” என்றார் கலை இயக்குநர் முத்துராஜ். 

‘சீமராஜா’ திரைப்படம் வரும் விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 13) அன்று வெளியாகவுள்ளது.

 

Our Score