full screen background image

ரஞ்சித் நாயகனாக நடித்திருக்கும் ‘எஸ்.பி.எம் 1 தி பாஸ்ட்’ திரைப்படம்!

ரஞ்சித் நாயகனாக நடித்திருக்கும் ‘எஸ்.பி.எம் 1 தி பாஸ்ட்’ திரைப்படம்!

முன்னணி நடிகர் ரஞ்சித் கதாநாயகனாக நடிக்க, சி.தேவந்தன் இயக்கியிருக்கும் படம் ‘எஸ்.பி.எம் 1 தி பாஸ்ட்.’

படத்தில் காயத்ரி ரெமோ நாயகியாக நடித்திருக்கிறார். மீசை ராஜேந்திரன், யாமினி, பிரேம்குமார்,  விஜயகுமார், ராஜ்குமார் ஆகியோருடன் படத்தின் இயக்குநர் தேவநந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – சி.தேவநந்தன், ஒளிப்பதிவு – விஜயன், அண்ணாதுரை, டைட்டன் முருகேஷ், இசை – திவாகர், பின்னணி இசை – ஆரோன், பாடல்கள் – சோமன் சந்திரமதி
எடிட்டிங் – துரைராஜ், நடனம் – என்.சி.கே ராஜ், சண்டைப் பயிற்சி – பேராச்சி பாண்டியன், பத்திரிக்கை தொடர்பு – வெங்கட்.

ட்ரீம் வேர்ட்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில், ஐந்து பாடல்களும், சிலிர்ப்பூட்டும் அதிரடியான நான்கு சண்டைக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

‘ஓரப்பார்வை பாத்துபுட்டாலே’, ‘என் முத்த சத்தத்தில்’ என்ற இரண்டு இனிமையான பாடல்களும், சிங்காரியா சிருங்காரியா’ என்ற துள்ளலிசை பாடலும் படத்திற்கு பக்க பலமாக இருக்கும்’ என்கின்றனர் படக் குழுவினர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”ஒரு கிராமத்தில் ஒரு கொலை நடக்கிறது. கொலையாளியையும் கொலைக்கான காரணத்தையும் கண்டுபிடிக்க செல்லும்போது தோண்டத் தோண்ட சுரங்கம் போல் அடுத்தடுத்து கொலைக் குற்றம் என்று நீண்டு கொண்டே செல்கிறது. அதன் பின்னணியை எவ்வாறு கண்டுபிடித்து கண் முன்னே நிறுத்துகிறார்கள் என்பதை மூன்று விதமான காலகட்டங்களில் நிகழும் சம்பவங்களாக்கி திரைக்கதை பின்னப்பட்டது” என்கிறார்.

படத்தின் டிரெய்லர் வெளியாகி ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. படம் டிசம்பரில் வெளியாகவுள்ளது.

Our Score