சவரிக்காட்டின் ரகசியம்தான் படத்தின் கதை..!

சவரிக்காட்டின் ரகசியம்தான் படத்தின் கதை..!

அன்னை தெரசா பிலிம்ஸ் சார்பாக எம்.என்.கிருஷ்ணகுமார் தயாரித்து இயக்கும் படம் ‘சவரிக்காடு’.

இந்தப் படத்தில் கதாநாயகர்களாக ரவிந்திரன், ராஜபாண்டி, கிருஷ்ணகுமார் ஆகிய மூவரும் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக ஸ்வாதி, ரேணு இருவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் சூரி, ரோபோ சங்கர், சண்முகராஜன், அல்வா வாசு, அவன் இவன் ராமராஜன், சின்னசங்கர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –  கே.கோகுல்

இசை  –  A.T.இந்திரவர்மன்

பாடல்கள்  –  தேவதேவா, திருக்குமரன்

படத்தொகுப்பு   –  மாரீஸ்

கலை   –  எம்.ராஜா கண்ணதாசன்

நடனம்   –  விஜயபாண்டி

ஸ்டண்ட்   –  மிரட்டல் செல்வா

தயாரிப்பு மேற்பார்வை   –   ஆர்.நாகராஜன்

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு –  எம்.என்.கிருஷ்ணகுமார்.

படம் பற்றி இயக்குனர் பேசும்போது, “சவரிக் காட்டிற்குள் நடக்கும் கதைதான் இது. இந்த சவரிக் காட்டோட ரகசியங்களை தெரிஞ்சுகிட்ட யாரும் இந்த காட்டவிட்டு உயிரோட வெளிய போக முடியாது என்பதுபோலத்தான் திரைக்கதை அமைத்திருக்கிறோம். இந்த சவரிக் காட்டிற்குள் நடக்கும் திகிலான த்ரில் சம்பவங்கள் நிச்சயம் ரசிகர்கள் ரசிக்கும்விதமாக இருக்கும்.

இந்த படம் துவக்கத்தில் சூரி மற்றும் ‘ரோபோ’ சங்கர் இருவரின் காமெடியில் கலகலப்பாக செல்லும். பின்பு பாரஸ்ட் ரேஞ்சராக சண்முகராஜன் வந்த பிறகு படம் திரில்லராக மாறிச் செல்லும். கொடைக்கானல், பழனி, திண்டுக்கல், உடுமலைப்பேட்டை போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது..” என்றார் இயக்குனர் எம்.என்.கிருஷ்ணகுமார்.

Our Score