full screen background image

அப்பாவும், மகன்களும் இணைந்து நடிக்கும் ‘ஐவராட்டம்’..!

அப்பாவும், மகன்களும் இணைந்து நடிக்கும் ‘ஐவராட்டம்’..!

சுப.செந்தில் பிக்சர்ஸ் – த வைப்ரண்ட் மூவீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஐவராட்டம்.’

இந்த படத்தில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயப்பிரகாஷின் இரண்டு மகன்கள் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள். நிரஜ்ஜன் ஜெயபிரகாஷ், துஷ்யந்த் ஜெயபிரகாஷ் இருவரும் நடிக்கும் இந்தப் படத்தில் இவர்களது அப்பா ஜெயப்பிரகாஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மேலும் அம்ருத் கலாம் என்பவரும் இன்னொரு ஹீரோவாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக நித்யாஷெட்டி நடித்திருக்கிறார்.

வில்லனாக C.K.செந்தில்குமார் நடிக்கிறார். மற்றும் ராதாரவி, கிங்காங், மனோகர் ராஜபாண்டி, ஆலன், காசி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –   ரவீந்திரநாத் குரு

இசை   –  சுவாமிநாதன்

பாடல்கள்   –   மோகன்ராஜன்

கலை   –  மயில் கிரிஷ்

நடனம்   –  நந்தா

எடிட்டிங்     –  சூர்யா

தயாரிப்பு மேற்பார்வை  –  கோடை சலீம்

தயாரிப்பு   –   C.K.செந்தில்குமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  –  மிதுன்மாணிக்கம்

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..

“சிவகங்கை மாவட்டத்தில் நடந்த உண்மை கதைதான் இது. இன்று இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு நிகராக கால்பந்தாட்டமும் புகழ் பெற்று வருகிறது. அது தவிர வழக்கமான சினிமாவில் இருந்து விலகி விளையாட்டை பிரமாதப்படுத்தி படங்கள் தயாராகிக் கொண்டிருகின்றன. அதில் நாங்களும் பங்கு கொள்கிறோம் என்னும்போது பெருமையா இருக்கு.

நமது அடுத்தத் தலைமுறையினர் அறிவுப்பூர்வமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க படிப்போடு விளையாட்டும் முக்கியம் என்பதை அழுத்தமாகச் சொல்லி அதே நேரம் கமர்ஷியலாகவும் படத்தை உருவாக்கியுள்ளோம். படம் விரைவில் வெளியாக உள்ளது..” என்றார் இயக்குனர் மிதுன்மாணிக்கம்.

Our Score