‘குபேரன் சினிமாஸ்’ என்கிற புதிய நிறுவனத்தின் சார்பில் குபேரன் பொன்னுசாமி தயாரித்திருக்கும் புதிய படம் ‘சதுரன்’.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் சூப்பர் ஹிட் பட இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணாவின் இணை இயக்குனரும், பிரபல ஒளிப்பதிவாளர் R.N.K. பிரசாத்தின் மகனுமாகிய ராஜீவ் பிரசாத் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் ‘மூடர் கூடம்’ ராஜாஜி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஜூனியர் நஸ்ரியா போலிருக்கும் அறிமுக நடிகை வர்ஷா மலேத்ரியா நடித்துள்ளார். மேலும் காளி வெங்கட், ராஜூ ஈஸ்வரன், ‘கயல்’ புகழ் தேவராஜ், கௌதம் கிருஷ்ணா, பாவா லட்சுமணன், எலிசபெத் சூரஜ் உட்பட பலர் நடித்துள்ளனர்.
பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஜி.மோனிக் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டங் – சுரேஷ் அர்ஸ். ‘ஆம்பள’, ‘என்னமோ நடக்குது’, ‘டார்லிங் 2’ படங்களுக்கு வசனம் எழுதிய G.ராதாகிருஷ்ணன் இந்தப் படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். ஏ.கே.ரிஷால் சாய் இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, முத்தமிழ் மற்றும் ரிஷால் சாய் ஆகியோர் எழுதியுள்ளனர். தினா, நந்தா இருவரும் நடனம் அமைத்துள்ளனர். கே.கணேஷ்குமார் சண்டை பயிற்சியை மேற்கொண்டுள்ளார். பழனிவேல் கலை இயக்கம் செய்துள்ளார்.
மருத்துவ துறையின் முறைகேடுகளை தோலுரித்து காட்டும் இந்தப் படத்தின் கதை, ஒரே நாளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது ஆட்டோ ஓட்டுனராக வரும் ஹீரோவின் வாழ்வில் ஒரு நாள் குறுக்கிடுகிறார் ஹீரோயின். எதிர்பாராத ஒரு நாளில் ஹீரோயினுக்கு பிரச்சினை ஏற்பட அதிலிருந்து அவரைக் காப்பாற்ற ஹீரோ எடுக்கும் முயற்சியே இந்த ‘சதுரன்’ படத்தின் சுவாரஸ்யமான கதை.
நகைச்சுவை, காதல், திகில், சஸ்பென்ஸ் கலந்த திருப்பம் நிறைந்த இந்த ‘சதூரன்’ திரைப்படம் ஒரு பெரிய வெற்றியை பெற்றுத் தரும் என்று படக் குழுவினர் நம்பிக்யைுடன் தெரிவிக்கிறார்கள்.