full screen background image

‘பிக் பாஸ்’ சம்யுக்தாவுடன் சசிகுமார் நடிக்கும் புதிய படம்

‘பிக் பாஸ்’ சம்யுக்தாவுடன் சசிகுமார் நடிக்கும் புதிய படம்

இயக்குநரும், நடிகருமான சசிகுமார், டி. இமான் இசையில், அறிமுக இயக்குநர் எம்.ஹேமந்த் குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

பெயரிடப்படாத இப்புதிய படத்தை கார்த்தி நடிக்கும் சர்தார்’ திரைப்படத்தை தயாரித்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ்.லஷ்மண்குமார் தனது 5-வது படைப்பாக மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு – கணேஷ் சந்திரா, இசை – டி.இமான், படத் தொகுப்பு – சிவ நந்தீஸ்வரன், கலை இயக்கம் – மிலன், சண்டை இயக்கம் – அன்பறிவு, நிர்வாகத் தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை – A. பால் பாண்டியன், மக்கள் தொடர்பு – A. ஜான், எழுத்து, இயக்கம் – எம்.ஹேமந்த்குமார்.

கிராமத்து பின்னணியில் ஆக்சன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களுடன் பிரம்மாண்டமான செலவில் உருவாகும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ்’ புகழ் சம்யுக்தா ஷான் நடிக்கிறார்.

கதாநாயகி உட்பட படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இத்திரைப்படத்திற்கான பாடல் பதிவு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

Our Score