full screen background image

சசிகுமாரின் புதிய படம் பூஜையுடன் துவங்கியது..!

சசிகுமாரின் புதிய படம் பூஜையுடன் துவங்கியது..!

படத்திற்கு படம் வித்தியாசம் நிறைந்த கதாபாத்திரத்தாலும், தன்னுடைய எதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்த நடிகர் M.சசிகுமார் சமீபத்தில் வெளியான ‘கிடாரி’ படத்திற்கு பின் தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் மூலமாக மீண்டும் புதிய படமொன்றை பிரம்மாண்டமான செலவில் தயாரித்து அதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

இயக்குநர்கள் பாலா மற்றும் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த P.பிரகாஷ், இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகிணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

கலை இயக்கம் – மாயபாண்டி, ஒளிப்பதிவு – ரவிந்திரநாத் குரு, இசை – தர்புகா சிவா, படத் தொகுப்பு – பிரவின் ஆண்டனி, தயாரிப்பு நிர்வாகம் – முத்துராமலிங்கம், மக்கள் தொடர்பு – நிகில், இணை தயாரிப்பு – B. அசோக்குமார், தயாரிப்பு – கம்பெனி புரொடக்ஷன்ஸ், கதை திரைக்கதை வசனம் இயக்கம் – P.பிரகாஷ்.

அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் மிகவும் ஜனரஞ்சகமான முறையில் எடுக்கப்படவுள்ளது.  இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.

Our Score