‘சங்கதி’ படத்தில் குங்பூ மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார்

‘சங்கதி’ படத்தில் குங்பூ மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார்

வி.ஆர்.கம்பைன்ஸ் சார்பில் விமலா ராஜநாயகம் தயாரிக்கும் படம் ’சங்கதி.’

அறிமுக இயக்குநரான மகேஷ் பூபதி இயக்கும் இந்தப் படத்தில் புதுமுகம் வினோ ஹீரோவாக நடிக்கிறார். இவர் கூத்துப் பட்டறை மாணவர். ஹீரோயின் மற்றும் பிற நடிகர் நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

பிரபல குங்பூ மாஸ்டர் ராஜநாயகம், இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர் அகில இந்திய குங்பூ போட்டியில் எட்டு முறை பிளாக் பெல்ட் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் படம் குறித்து இயக்குநர் மகேஷ் பூபதி கூறுகையில், “இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட காதல் சமூக கதை. காதல் என்றாலே வெறுக்கும் சமூகத்தில் உள்ள ஒருவன் தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு காதல் வந்தால் என்ன நடக்கும் என்பதே கதை.

சமுதாயத்தோடு பின்னி பிணைந்த அழகான காதல் கதையாகவும், காதலுக்காக ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கும் அன்றாட போராட்டங்களை சொல்லும் படமாகவும் ‘சங்கதி’ உருவாக உள்ளது” என்றார்.

கண்மணி ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் பாடல் பதிவுடன் தொடங்க உள்ளது.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பை கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளிலும், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை ஊட்டி, அந்தமான் ஆகிய பகுதிகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.