full screen background image

விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ நவம்பர் 15-ம் தேதி வெளியாகிறது..!

விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’ நவம்பர் 15-ம் தேதி வெளியாகிறது..!

‘பாதாள பைரவி’, ‘மாயா பஜார்’, ‘மிஸ்ஸியம்மா’, எம்.ஜி.ஆர் நடித்த – ‘எங்க வீட்டு பிள்ளை’, ‘நம் நாடு’, ரஜினிகாந்த் நடித்த ‘உழைப்பாளி’, கமலஹாசன் நடித்த ‘நம்மவர்’ மற்றும் ‘தாமிரபரணி’, ‘படிக்காதவன்’, ‘வேங்கை’, ‘வீரம்’, ‘பைரவா’ உட்பட 60-க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பழம் பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் ‘விஜயா புரொடக்ஷன்ஸ்’.

இத்தகைய புகழ் பெற்ற விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ள திரைப்படம் ‘சங்கத் தமிழன்’. தயாரிப்பாளர் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் 6-வது படம் இதுவாகும்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக  நடிகை ராஷி கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ்  இருவரும் நடித்துள்ளனர்.

‘சுந்தர பாண்டியன்’, ‘ரம்மி’ ஆகிய படங்களுக்கு பிறகு  நடிகர் / காமெடியன் சூரி 3- வது முறையாக இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இந்தப் படத்தில் நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமன் போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – விஜய் சந்தர், தயாரிப்பு – பி.பாரதி ரெட்டி, ஒளிப்பதிவு   – R.வேல்ராஜ், படத் தொகுப்பு – பிரவீன் K.L., இசை – விவேக், மெர்வின், சண்டை இயக்கம் – அனல் அரசு, கலை இயக்குநர் – பிரபாகர், நிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன், குமரன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது. 

விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஸ்கெட்ச்’ படத்தின் இயக்குநரான விஜய் சந்தர், இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதி, இயக்குநர் விஜய் சந்தருடன் முதன் முறையாக இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ‘சங்கத் தமிழன்’ திரைப்படத்தை லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிடுகிறார்.

வரும் நவம்பர் 15-ம் தேதியன்று இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Our Score