‘சண்ட கோழி-2’ – பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது…!

‘சண்ட கோழி-2’ – பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது…!

விஷால் நடிப்பில் இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2005-ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘சண்ட கோழி’.

இன்று இத்திரைப்படத்தை எங்கு திரையிட்டாலும் தியேட்டரில் கூட்டம் களைகட்டும். தொலைக்கட்சியில் ஒளிபரப்பானால் டி.ஆர்.பி. ரேட்டிங் அதிகமாகும். இதை போல் பல சாதனைகளை வசூல் ரீதியாகவும் நிகழ்த்திக் காட்டிய ‘சண்ட கோழி’ திரைப்படத்தின் 2-ம் பாகம் இன்று துவங்கியது.

தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - சக்தி, தயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரி, தயாரிப்பாளர் – விஷால், எழுத்து, இயக்கம் – லிங்குசாமி.

மிகவும் எதிர்பார்க்கப்படும் வெற்றிக் கூட்டணியான விஷால் – இயக்குநர் லிங்குசாமி இணையும் இப்படத்துக்காக சென்னை பின்னி மில்லில் மிகப் பெரிய அளவில் மதுரை திருவிழா செட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செட்டில் விஷால், கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்ட காட்சி படமாக்கப்பட்டது.

‘துப்பறிவாளன்’ தந்த வெற்றியினால் தெம்பாக இருக்கும் விஷாலுக்கு அடுத்தடுத்து ஹிட்டுகள் கிடைக்கப் போகின்றன என்கின்றனர் விஷால் ரசிகர்கள்..!