இளைஞர்களுக்குப் பிடித்த வகையில் உருவாகியிருக்கும் ‘ஹரஹர மஹாதேவகி’

இளைஞர்களுக்குப் பிடித்த வகையில் உருவாகியிருக்கும் ‘ஹரஹர மஹாதேவகி’

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ரானி  நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை புதுமுக இயக்குநரான சந்தோஷ் P.ஜெயக்குமார் இயக்கியுள்ளார். 

படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் டிரெயிலரை பார்த்தவர்களும், விழா மேடையில் நடந்தவைகளையும் பார்த்தபோது இந்தப் படம் இன்னொரு ‘த்ரிஷா இன்னொரு நயன்தாரா’தான் என்று அடித்துச் சொல்கிறார்கள்.

இப்போதே அந்த அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் இயக்குநரான சந்தோஷ் பி.ஜெயக்குமார் படம் பற்றி பேசும்போது, “இந்தக் காலத்து இளைஞர்களுக்கு பிடித்த வகையில்தான் இந்த ‘ஹரஹர மஹாதேவகி’ படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கதாநாயகன் கவுதம் கார்த்திக் மற்றும் கதாநாயகி நிக்கி கல்ராணிக்கும் இடையே காதல் ஏற்பட்டு திடீரென்று காதல் முறிவும் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்கள்தான் படத்தின் கதை.

கவுதம் கார்த்திக் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி நல்ல மனிதர்.  இந்த சமயத்தில் நான் என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எந்நேரமும் படத்தை  பற்றியும், படத்திற்கான இடத்தேர்வு பற்றியும் தீவிரமாக சிந்தித்து கொண்டிருப்பார்கள். அவர்களின் ஆர்வம் என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. இத்திரைப்படம் காதல் கலந்த அடல்ட் கதையாக உள்ளது. என்னுடைய  அடுத்த படம் ஹாரர் கலந்த அடல்ட் கதையாக இருக்கும்…” என்றார்.

Our Score