full screen background image

விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ 2-ம் பாகம் உருவாகிறது..!

விசுவின் ‘சம்சாரம் அது மின்சாரம்’ 2-ம் பாகம் உருவாகிறது..!

ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் விசு எழுதி, இயக்கி 1986-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சம்சாரம் அது மின்சாரம்.’

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்ற இத்திரைப்படம், வசூலிலும் சக்கைப் போடுபோட்டது.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம், தற்போது உருவாகவிருக்கிறது. இத்திரைப்படம் மறைந்த இயக்குநர் விசு, கடைசியாக எழுதிய கதை, திரைக்கதை, வசனம் எழுதியதாகும்.

இத்திரைப்படம் அவரது லட்சியப் படைப்பாக இருந்தது. ஆனால் அதற்குள் காலன் அவரைப் பறித்துக் கொண்டாலும் அவருடைய எழுத்தில் இயக்கத்தை மட்டும் வேறொருவர் செய்ய இத்திரைப்படம் இப்போது உருவாகுகிறது.

இந்தப் படத்தை மக்கள் அரசன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராஜா தயாரிக்கிறார்.

இந்த நிறுவனம் விமல் நடிப்பில் எங்க பாட்டன் சொத்து’, விதார்த், யோகி பாபு நடிக்கும் ‘உலக மகா உத்தமர்கள்’, பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன் நடிக்கும் ‘மேதாவி’ ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

இந்த ‘சம்சாரம் அது மின்சாரம்–2’ படத்தை விசுவின் பிரதான சிஷ்யரான வி.எல்.பாஸ்கர்ராஜ் இயக்குகிறார். இவர் இவர் ராஜ் டிவியில் அகட விகடம்’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இசை – பரத்வாஜ், பாடல்கள் – பா.விஜய், ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை இயக்கம் – வனராஜ், மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, தயாரிப்பு நிர்வாகம் – ரமணி.

இந்தப் படத்தில் உதவி வசனகர்த்தாவாக இயக்குநர் விசுவின் மகள் லாவண்யா விசு பணியாற்றுகிறார்.

இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதா்பாத்திரத்தில் நடிக்க நடிகர் ராஜ்கிரணிடம் பேசப்பட்டு வருகிறது.

மற்ற நட்சத்திரத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

இந்த சம்சாரம் அது மின்சாரம் – 2’ படம் பற்றி இயக்குநர் பாஸ்கர் ராஜ் பேசும்போது, “இது இளைஞர்கள், பெரியவர்கள், அனைவரும் ரசிக்கக் கூடிய கதம்பமான ஒரு குடும்பக் கதை. அனைத்துத் தரப்பு மக்களையும் திரையரங்கை நோக்கி வரவழைக்கும் இன்றைய சூழலுக்கு ஏற்ற கதை. இன்னொரு வீட்டில் இருக்கும் சம்சாரம் என்னும் மின்சாரத்தின் கதை இது..” என்றார்.

Our Score