full screen background image

நடிகர் பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ திரைப்படம்..!

நடிகர் பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ திரைப்படம்..!

எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘வசந்த முல்லை’.

இந்தப் படத்தின் நாயகனாக நடிகர் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரங்களில் பல முக்கிய நடிகர், நடிகைகளும் நடித்துள்ளனர். அது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

தயாரிப்பு நிறுவனங்கள் – எஸ்.ஆர்.டி எண்டர்டையின்மெண்ட் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி, தயாரிப்பு மேலாளர் – நாகராஜ் ஆர்.கே., கதை, திரைக்கதை, இயக்கம் – ரமணன் புருஷோத்தமா, வசனம் – பொன்னி வளவன், ஒளிப்பதிவு – கோபி அமர்நாத், இசையமைப்பாளர் – ராஜேஷ் முருகேஷன், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், சண்டை இயக்கம்  – ஸ்டன்னர் சாம், ஸ்டண்ட் சில்வா, ஆடை வடிமைப்பு – நந்தினி என்.கே., விளம்பர வடிவமைப்பு – டியூனி ஜான், மக்கள் தொடர்பு – யுவராஜ்.

இந்தப் படத்தை குறும்பட இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கி வருகிறார்.

இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.

ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் விருந்து காத்திருக்கிறது.

நாயகன் பாபி சிம்ஹாவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்றைக்கு வெளியிட்டுள்ளது படக் குழு.

Our Score