full screen background image

அஜீத் நடித்த வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார்..!

அஜீத் நடித்த வேடத்தில் சல்மான்கான் நடிக்கிறார்..!

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்து 2014-ல் திரைக்கு வந்த திரைப்படம் ‘வீரம்’. இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். மேலும் விதார்த், பாலா, நாசர், அதுல் குல்கர்னி மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

இதே திரைப்படம் தெலுங்கில் பவன் கல்யாணின் நடிப்பில் ‘கட்டமறயுடு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றியைப் பெற்றது.

இப்போது அதே ‘வீரம்’ படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த இந்தி ரீமேக்கில் முதலில் அக்‌ஷய் குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது அவர் திடீரென்று படத்தில் இருந்து விலகி விட்டார்.

அதனால், அவருக்குப் பதிலாக பல்வேறு நடிகர்களிடத்தில் பேசி பலனளிக்காமல் போக கடைசியில் பாலிவுட் பாதுஷா’ சல்மான்கானை அணுகியிருக்கிறார்கள் தயாரிப்பாளர் தரப்பு. சல்மான்கானும் படத்தைப் பார்த்துவிட்டு நடிப்பதற்கு ஒத்துக் கொண்டாராம்.

இதையடுத்து சல்மான்கான் நடிப்பில் ‘வீரம்’ இந்தி ரீமேக் படத்தின் வேலைகள் தொடங்கியிருப்பதாக பாலிவுட் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படத்துக்கு பை ஈத் கபி தீவாளி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே தேர்வாகி  உள்ளார்.

இந்தக் கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர்.

 
Our Score