‘சகலகலாவல்லவன் – அப்பாடக்கர்’ திரைப்படத்தின் பாடல்கள் இன்று மதியம் வெளியாகவுள்ளது.
நடிகர்கள் ஜெயம் ரவி, சிம்பு, விவேக், நடிகை ரம்யா நம்பீசன், இசையமைப்பாளர்கள் தேவா, டி.இமான் ஆகியோர் பாடல்களை பாடியிருக்கின்றனர்.
இதில் அண்ணாமலை எழுதிய ‘ஹிட்டு ஸாங்’ என்னும் பாடலை நடிகர் சிம்பு, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் மான்ஸி, மோனிஸா இணைந்து பாடியிருக்கின்றனர்.
நா.முத்துக்குமார் எழுதிய ‘புஜிமா’ பாடலை மான்ஸியுடன் இணைந்து பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான்.
நா.முத்துக்குமார் எழுதிய ‘பல்பு வாங்கிட்டே்ன் மச்சான்’ பாடலை இசையமைப்பாளர் தேவாவுடன் இணைந்து பாடியிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.
கார்க்கி எழுதிய ‘உன் ஸ்டைல் பவர்’ என்ற பாடலை ஷர்மிளாவும், தீபக்கும் இணைந்து பாடியிருக்கின்றனர்.
நா.முத்துக்குமார் எழுதிய ‘புஜிமா’ பாடலின் இன்னொரு வெர்ஷனை மான்ஸியுடன் இணைந்து பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன்.
கார்க்கி எழுதிய ‘மண்ட்ரியும்’ பாடலை சமீராவும் நிவாஸும் இணைந்து பாடியிருக்கின்றனர்.
இசை வெளியீட்டு விழா இன்று மதியம் 2 மணிக்கு ரேடியோ மிர்ச்சி பண்பலை வானொலி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ஜெயம் ரவி, சூரி, இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன், இயக்குநர் சுராஜ், தயாரிப்பாளர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.