பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சாஹூ’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் வெளியானது..!

பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சாஹூ’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் வெளியானது..!

1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த ‘பாகுபலி-2’ படத்திற்கு பிறகு  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில், நாயகன் பிரபாஸின் நடிப்பில் ‘சாஹூ’ என்ற திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது.

UV கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் வம்சி, பிரமோத், விக்ரம் மூவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரத்தா கபூர் நடிக்க ஜாக்கி ஷிராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல அனுபவமிக்க நடிகர்களும் நடித்துள்ளனர்.

மதியின் ஒளிப்பதிவும், சாபு சிரிலின் தயாரிப்பு வடிவமைப்பும் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.  ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பினை மேற்கொள்கிறார். அமிதாப் பட்டாச்சார்யாவின் ரசிக்கதக்க பாடல் வரிகளுக்கு, சங்கர்-எஹ்சான்-லாய் இணை இசையில் உங்கள் காதுகளில் ரீங்காரமிட பாடல்கள் தயாராகியுள்ளன. இயக்குநர் சுஜீத் இப்படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.  

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளில் தனது படம் குறித்த பிரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ், இந்த ஆண்டு தனது பிறந்த நாளான கடந்த அக்டோபர் 23-ம் தேதி, இந்த 'சாஹூ' திரைபடத்தின் "Shades of Saaho" எனும் பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில், இப்படத்தின் அடுத்த காட்சி தொகுப்புகள் எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாய் அமைத்துள்ளது இந்த 'Shades of Saaho' காட்சி தொகுப்பு.

இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபுதாபியில் மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான சண்டை காட்சிகளின் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.

இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல், இப்படத்திற்கான எதிர்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.