full screen background image

ஒரு பாடல் காட்சியில் ஹீரோ-ஹீரோயினுக்கு 50 உடைகள்..!

ஒரு பாடல் காட்சியில் ஹீரோ-ஹீரோயினுக்கு 50 உடைகள்..!

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் சகாப்தம்  படத்திற்காக லங்காவியிலும் அதன் சுற்றியுள்ள மலை மற்றும் கடல் பகுதிகளிலும் ஒரு டூயட் பாடல் 50 இலட்சம்  ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.

இதற்கு நடன மாஸ்டர் நோபல் நடனம் அமைத்திருக்கிறார். இப்பாடல் காட்சியில் நாயகன் சண்முகபாண்டியனும், நாயகி சுப்ரா ஐய்யப்பாவும் நடனம் ஆடியுள்ளார்கள். இந்த ஒரு பாடலில் மட்டும் நாயகன் 50 உடைகளும், நாயகி 50 உடைகளையும் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.

இந்தப் பாடல் காட்சிகளை லங்காவியில் இதுவரை யாரும் படம் பிடிக்காத பகுதிகளில் படம் பிடித்துள்ளார்கள். இதற்காக இப்படக் குழு காலை 4 மணிக்கு கிளம்பி சுமார் 5 மணி நேரம் பயணம் செய்துதான் லொகேஷனை அடைந்தார்களாம். இப்பாடல் நான்கு நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. இது மிகவும் சிறப்பாக வந்துள்ளதாம்.

Our Score