full screen background image

‘லிங்கா’ திரைப்படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்..!

‘லிங்கா’ திரைப்படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட்..!

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ‘லிங்கா’வின் சென்சார்ஷிப் இன்று முடிந்தது.

படத்திற்கு ‘யு’ சர்டிபிகேட் கிடைத்திருக்கிறது. மொத்தம் 2 மணி 56 நிமிடங்கள் படம் ஓடுகிறதாம்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இதனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தீர்ப்புக்காக காத்திருக்கும் வேளையில் ஒரு பிரச்சினை முடிந்து நிம்மதியாக இருக்கிறார் தயாரிப்பாளர். அடுத்தது தீர்ப்புதான். அதுவும் தடையில்லை என்றே கிடைக்குமென்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

எப்படியோ ரஜினி ரசிகர்களுக்கு இந்தாண்டு டபுள் ட்ரீட் கொண்டாட்டம்..! ரஜினியின் பிறந்த நாளன்று படம் வெளியாவது ஒரு பக்கம்.. இன்னொரு பக்கம் இன்றைய இளைய ஹீரோக்களுக்கு சவால்விடும் வகையில் மிக இளமையான தோற்றத்தில் சூப்பர்ஸ்டார் திரையில் தோன்றுவது அவரது ரசிகர்களுக்கு இரண்டாவது கொண்டாட்டம்..!

அடுத்தது தீர்ப்புக்காக வெயிட்டிங்..!

Our Score