full screen background image

‘சாமி-2’ படத்தில் சீயான் விக்ரமுக்கு வில்லன் ஆனார் பாபி சிம்ஹா

‘சாமி-2’ படத்தில் சீயான் விக்ரமுக்கு வில்லன் ஆனார் பாபி சிம்ஹா

‘சிங்கம்-3’ படத்திற்கு பின்பு இயக்குநர் ஹரி இயக்கப் போகும் புதிய படம் ‘சாமி-2’. விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியாகி சக்கைப் போடுபோட்ட இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தைத் தொடரவிருக்கிறார் இயக்குநர் ஹரி. இதற்காக நடிகர், நடிகைகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

படத்தில் வில்லனாக நடிகர் பாபி சிம்ஹாவை ஒப்பந்தம் செய்திருப்பதாக இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.

இது பற்றி இயக்குநர் ஹரி பேசும்போது, “நடிகர் விக்ரம் சார், ஆக்ஷன் ஹீரோவாக மட்டுமல்லாமல் நல்ல பர்ஃபாமராகவும் இருப்பது அவரின் தனி அடையாளம்.

அவருடன் மோதும் வில்லன், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஒரு நல்ல பர்ஃபாமராக இருக்கவேண்டும். அதனால்தான் பாபி சிம்ஹாவை வில்லனாக நடிக்க தேர்வு செய்துள்ளோம்.

‘சாமி’ படத்தின் முதல் பாகத்தில் ‘பெருமாள் பிச்சை ’என்ற வில்லன் கேரக்டர் வலுவாக இருக்கும். தற்போது தயாராகவிருக்கும் சாமி-2-வில் ‘பெருமாள் பிச்சை’யைவிட பத்து மடங்கு பலசாலியாகவும், புத்திசாலியாகவும் வில்லன் கேரக்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்த கேரக்டரில் பாபி சிம்ஹா புதிய அவதாரம் எடுக்கவிருக்கிறார்..” என்றார்.

சீயான் விக்ரமும், பாபி சிம்ஹாவும் தேசிய விருது பெற்ற நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score