full screen background image

இதுவரையிலும் வெளிவராத கதையில் படமாகும் ‘சாலையோரம்’ திரைப்படம்..!

இதுவரையிலும் வெளிவராத கதையில் படமாகும் ‘சாலையோரம்’ திரைப்படம்..!

ஸ்மைலி பிக்சர்ஸ் சார்பில் முருகன் சுப்பராயன் மற்றும் டாக்டர். செல்வ தியாகராஜன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ’சாலையோரம்.’

ராஜ், செரீனா இருவரும் ஹீரோ, ஹீரோயினாக அறிமுகமாக பாண்டியராஜன், சிங்கம் புலி, முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர், பாய்ஸ் ராஜன், ஆகியோரும் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளராக சிங்கப்பூரைச் சேர்ந்த சேது ராம் அறிமுகமாக, பின்னணி இசைக் கோர்ப்பு பணியை மரியா மனோகர் செய்திருக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுத வேல்முருகன், பிரசன்னா, மஹதி, பெள்ளிராஜ், பத்மலதா ஆகியோர் பாடியுள்ளனர். 

பி.வாசுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கே.மூர்த்தி கண்ணன் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

இந்தியாவிலேயே இதுவரை வெளிவந்திராத புதிய கதைக் களத்தை இப்படத்தில் கையாண்டிருக்கிறார். அருகிலிருக்கும் மனிதர்களின் அறியப்படாத  உணர்வுகளை, சுவாரஸ்யமாக திரையில் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

நாகப்பட்டினம், காரைக்கால், கொடைக்கானல் பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்து வருகிறது.

 

Our Score