புதுமுக இயக்குநர் சாய் பரத் இயக்கி, ஆல் இன் பிச்சர்ஸ் விஜய ராகவேந்திரா தயாரித்து வழங்கவிருக்கும் புதிய படம் ‘ரம்.’
இந்தப் படத்தில் ஹரிஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி, நரேன், மியா ஜார்ஜ், அம்ஜத் மற்றும் அர்ஜுன் சிதம்பரம் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – விக்னேஷ் வாசு, படத் தொகுப்பு – சத்யராஜ், கலை இயக்கம் – சிவா யாதவ், ஒலி வடிவமைப்பு – ஜி.சூரன், ஒப்பனை – தசரதன், சண்டை பயிற்சி – அசோக், விஷுவல் கிராபிக்ஸ் டிஸைன்ஸ் – Cerebrums, Designer – Fully Filmy.
ஏற்கனவே இந்த ‘ரம்’ திரைப்படத்திற்காக இளம் இசையமைப்பாளர் அனிரூத் உருவாக்கிய ‘ஹோலா ஹோலா அமிகோ’ பாடல் அனைத்து இளம் வட்டாரங்களையும் கவர்ந்துள்ள நிலையில், தற்போது இந்த படக் குழுவினர் மீண்டும் அனைத்து இளைஞர்களையும் ஈர்க்கும்விதமாக தங்கள் படத்தின் மற்றொரு பாடலை திகிலூட்டக் கூடிய அடர்ந்த காட்டுப் பகுதியில் படமாக்கியுள்ளனர்.
தல அஜித்தின் புகழ் பெற்ற பாடலான ‘அதாரு இதாரு’ பாடலுக்கு நடன கலைஞராக பணி புரிந்த சதீஷ், இந்த பாடலுக்கு நடன அமைப்பாளராக பணி புரிந்திருப்பது சிறப்பம்சமாகும். மேலும் பத்மஸ்ரீ விவேக் அவர்கள் இந்த பாடலுக்காக நடனம் ஆடியிருப்பது அனைவரின் ஆர்வத்தையும் தூண்டுகிறது.
சமீபத்தில் கலிபோர்னியாவை சேர்ந்த, உலக புகழ் பெற்ற டி.ஜே இசை கலைஞர் டிப்ளோ, ‘ஹோலா ஹோலா அமிகோ’ பாடலுக்கு தனது பாராட்டுகளை டிவிட்டர் வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.