‘மாஸ்டர்’ தயாரிப்பாளரின் புதிய படம் துவக்கம்..!

‘மாஸ்டர்’ தயாரிப்பாளரின் புதிய படம் துவக்கம்..!

மாஸ்டர்’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பு நிறுவனமான ‘எஸ்தல் எண்டர்டெய்னர்’ புதிய திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இத்திரைப்படத்திற்கு அழகிய கண்ணே’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் I.லியோனியின் மகன் லியோ சிவக்குமார் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கிவுள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, N.R.ரகுநந்தன் இசையமைக்கிறார். காடன் படத்தின் ஒளிப்பதிவாளர் A.R.அசோக்குமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். படத் தொகுப்பினை பிரபல படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மாணவர் சங்கத் தமிழன் கவனிக்கிறார். நடன இயக்குநராக ராதிகா மாஸ்டரும், படத்தின் தயாரிப்பு மேற்பார்வையை இளையராஜா செல்வம் அவர்களும் கவனிக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை இயக்குநர் சீனு ராமசாமியிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய R.விஜயகுமார் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது. படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 15-ம் தேதி சென்னையில் துவங்கி சென்னை மற்றும் மதுரையில் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இதர கதாபாத்திரங்களுக்கான நட்சத்திர தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

Our Score