full screen background image

தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம்..!

தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம்..!

தமிழ்த் திரைப்படங்களின் விநியோக உரிமையை குறிப்பிட்ட ஏரியாக்களுக்கு மட்டும் வாங்கி திரையரங்குகளில் திரையிட்டு வந்தது ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம்.

கடந்த 20 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 148-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இந்த நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.

இதன் பின்பு, ஹிப் ஹாப் தமிழா ஆதி நாயகனாக அறிமுகமான மீசையை முறுக்கு’ திரைப்படத்தின் தமிழக உரிமையை, முதல் படமாக வாங்கி வெளியிட்டு வெற்றிப் பயணத்தை தொடங்கியது.

அதன் பின்பு தொடர்ச்சியாக பல முக்கிய தமிழ்த் திரைப்படங்களை தமிழகத்தில் விநியோகம் செய்திருக்கிறது ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனம்.

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் நட்சத்திரங்களான அஜித்குமார், விஜய், சூர்யா, ஆர்யா, தனுஷ் ஆகியோர் நடித்த படங்களும் இதில் அடங்கும்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து 2017 தீபாவளியன்று வெளியான பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘மேயாத மான்’ படத்தை இந்நிறுவனம்தான் வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மிகப் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட அஜீத்குமார் நடித்து வெளியான ‘விவேகம்’ படத்தின் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டது.

தொடர்ந்து அமலாபால் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய ஆடை’, ஆர்யா நடிப்பில் வெளியான ‘மகாமுனி’, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘கொலைகாரன்’, ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘சிந்துபாத்’, அசுர வெற்றியைப் பெற்ற ‘அசுரன்’, ‘பெட்ரோமாக்ஸ்’ மற்றும் ‘நான் சிரித்தால்’ என்று பல வெற்றிப் படங்களை வெளியிட்டு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நிறுவனமாக ராக்போர்ட் எண்ட்டர்டெயின்மென்ட் தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளது.

2019-ம் வருடம் இந்நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஆண்டாக அமைந்தது.  ரசிகர்களின் நாடித் துடிப்பறிந்து,  மிகச் சிறந்த கதையம்சம் உள்ள படங்களை வாங்கி வெளியிட்டது.

விநியோகஸ்தர் T.முருகானந்தம் முதல் முறையாக குருதி ஆட்டம்’ படம் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் உருமாறினார். அதர்வா, பிரியா பவானி சங்கர்  நடிக்கும் இந்தக் ‘குருதி ஆட்டம்’ படத்தைத் தொடர்ந்து YouTube Put Chutney’ புகழ் ராஜா மோகன் இயக்கத்தில், குழந்தைகளை மையமாக கொண்ட, காமெடி கமர்ஷியல் படத்தை இரண்டாவது படைப்பாக தயாரித்து வருகிறார் முருகானந்தம்.

அதனைத் தொடர்ந்து எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு கொரானா காலத்திலும் திரைப்பட தயாரிப்புக்கான திட்டமிடலை நடைமுறைப்படுத்துவதில் முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார் தயாரிப்பாளர் முருகானந்தம்.

சமீபத்தில் தமிழ் சினிமா இயக்குநர்களில் தனக்கு என்று ரசனைமிக்க சினிமா ரசிகர்களைத் தன்னகத்தே வைத்திருக்கும் இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிப்பில் மூன்றாவது தயாரிப்பாக பிசாசு-2’ படத்தின் அறிவிப்பை வெளியிட்டு கோடம்பாக்கத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார் முருகானந்தம்.

‘பிசாசு-2’ படத்தின் வியாபாரத்தை முடிக்க முன்னணி விநியோகஸ்தர்கள் தற்போதே பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது படங்களை தேர்வு செய்வதில் ராக் போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளது.

மேலும், தமிழில் சில முக்கிய படைப்புகளின் உலகளாவிய உரிமையை வாங்குவதற்கான வியாபார பேச்சு வார்த்தைகளை நடத்தி வருகிறது ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட்.

தற்போது மாஸ்டர் பீஸ் புரொடெக்சன் நிறுவனத்திடமிருந்து நடுகாவேரி இயக்கத்தில் கயல் ஆனந்தி, ரோகித் ஷ்ராஃப் நடிப்பில் உருவாகும் கமலி’ படத்தின்  உரிமையை பெற்றிருக்கிறது.

மேலும், ஆகாஷ் பிரபு, ஜானகி,  ஐஸ்வர்யா முருகன், அருன் மற்றும் வித்யா பிள்ளை நடிக்கும் ‘மாய பிம்பம்’ படத்தின் உரிமையையும் இந்த நிறுவனமே பெற்றுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் தயாராகியுள்ள ‘பூமி’ படத்தை தமிழகத்தில் உள்ள ஏழு ஏரியாக்களில் வெளியிடும் உரிமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

இப்படி தமிழ்ச் சினிமாவில் மிக முக்கியமான ஒரு வியாபார கேந்திரமாகத் திகழும் ராக்போர்ட் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான முருகானந்தத்துடன் ஒரு சுவாரஸ்யமான பேட்டி இது :

️திரைப்படத் தயாரிப்பு மிகவும் ஆபத்தானது என்று சொல்லப்படும் நேரத்தில் நீங்கள் தயாரிப்பில் இறங்கத் துணிந்தது எப்படி..?

நல்ல படங்களைச் சரியாக மார்க்கெட்டிங் செய்தால் வெற்றி நிச்சயம் என்பதுதான் நான் கற்றுக் கொண்ட பாடம். எனவே நம்பிக்கையுடன் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறேன்.

️விநியோகஸ்தர்களின் ரீஃப்ண்ட், திரையரங்கு வசூலில் வெளிப்படைத் தன்மையின்மை ஆகியன குறித்து..?

ஒரு படம் நன்றாக ஓடும் என்று நம்பித்தான் வெளீயிடுகிறோம். அது தப்பாகிவிட்டால் ரீஃப்ண்ட்  கொடுக்க வேண்டி வரும். நாம் தொடர்ந்து இந்த வியாபாரத்தில் இருப்பதால், அடுத்தடுத்த படங்களில் சரி செய்துவிடலாம்.

திரையரங்கு வசூலைப் பொறுத்தவரை எங்காவது ஒரு சில இடங்களில் வசூலில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருக்கலாம். பெரும்பாலும் எல்லாம் சரியாகவே இருக்கிறது.

️ திரையரங்குக்காரர்கள் வசூல் தொகையைப் பல மாதங்கள் தராமல் இழுத்தடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

முதல்நாள் வசூலை அடுத்த நாளே தருகிறவர்களும் இருக்கிறார்கள். மாதக்கணக்கில் இழுக்கிறவர்களும் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சமாளித்துத்தான் தொழில் செய்தாக வேண்டும்.

️நடிகர்களின் சம்பளம் அதிகமாக இருப்பதால் திரைப்படத் தொழில் நசிவதாகச் சொல்லப்படுவது பற்றி..?

உண்மைதான், சில படங்களில் படத்தின் மொத்தச் செலவைக் காட்டிலும் நடிகரின் சம்பளம் அதிகம் என்றாகிறது. அங்கு தொடங்குகிற சிக்கல் திரையரங்கில் அதிக விலைக்கு டிக்கெட் விற்கச் சொல்வதுவரை வந்து நிற்கிறது. தயாரிப்பாளர்களுக்குள் முழு ஒற்றுமை ஏற்பட்டால்தான் இச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்.

பூமி’ படத்தின் சென்னை, செங்கல்பட்டு தவிர மற்ற ஏரியாக்களின் தமிழக விநியோக உரிமையைப் பெற்றிருக்கிறீர்கள். அத்திரைப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறதே…?

அது குறித்து தயாரிப்பாளருடன் பேசியிருக்கிறோம். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

Our Score