உலகம் முழுவதும் பொது மக்களிடையே சமையல் நிகழ்ச்சிகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகளவு மக்கள் கண்டுகளிக்கும் நிகழ்ச்சியாகவும், சமையல் நிகழ்ச்சிகள்தான் முன்னணியில் இருக்கின்றன.
அந்த வகையில் நடிகர் ரோபோ சங்கர், குருஷி இருவரும் ‘பொங்குறோம் திங்கிறோம்’ என்னும் சமையல் கலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்கள். முழுக்க, முழுக்க நகைச்சுவையோடு இந்த சமையல் நிகழ்ச்சி தயாராகவுள்ளது.
இதன் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவிருக்கிறது. மலேசியாவின் உணவுகளைப் பற்றியும் இந்த நிகழ்ச்சியில் முன்னிலைப்படுத்தவிருக்கிறார்கள்.
இந்த ‘பொங்குறோம் திங்கிறோம்’ நிகழ்ச்சிக்கு கிரேஷ் கருணாஸ் மற்றும் சமையல் கலை நிபுணர் வினோத்குமார் இருவரும் நடுவர்களாகப் பணியாற்றுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அமுதவாணன், தங்கதுரை, நாஞ்சில் விஜயன், ஷர்மிளா, சம்யுக்தா, ஆகாஷ், பிரியா, உதயா, சில்மிசம் சிவா, சாய், ரஞ்சித், இந்திரஜா ரோபோ சங்கர், சாய் ஆகியோர் போட்டியளர்களாக பங்கு பெறுகின்றனர்.
நகைச்சுவையோடு, விதவிதமான உணவு வகைகளையும் கண்களுக்கு விருந்தாக்க வருகிறது ‘பொங்குறோம் திங்கிறோம்’ சமையல் நிகழ்ச்சி.









