full screen background image

‘ஆரண்ய காண்டம்’ படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது

‘ஆரண்ய காண்டம்’ படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது

2011-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று ‘ஆரண்ய காண்டம்’. தயாரிப்பாளரும், பின்னணிப் பாடகருமான எஸ்.பி.பி.சரண் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.

அறிமுக இயக்குநரான தியாகராஜன் குமாரராஜா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இவருடைய  இரண்டாவது படம்தான் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.

‘ஆரண்ய காண்டம்’ படத்தில் ஜாக்கி ஷெராப், ரவி கிருஷ்ணா, சம்பத் ராஜ், யாஷ்மின் பொன்னப்பா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. வெளியீட்டின்போது வெற்றி பெறாமல், பின்னர் மக்களாலும், தீவிர திரைப்பட ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

அதேபோல் இப்படம் வசூல் ரீதியாக நஷ்டத்தைத் தந்திருந்தாலும், விருதுகளை வென்று குவித்தது. சிறந்த படத்தொகுப்பு, சிறந்த அறிமுக இயக்குநர் ஆகிய 2 தேசிய விருதுகளையும் இத்திரைப்படம் வென்றது.

இத்திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், தற்போது இந்தப் படத்தை இந்தியில் மொழி மாற்றம் செய்ய உள்ளனர்.

பாலிவுட் திரையுலகின் முன்னணித் தயாரிப்பு நிறுவனமான டிப்ஸ் நிறுவனம் இதன் ஹிந்தி ரீமேக் உரிமையை கைப்பற்றியுள்ளதாம். அடுத்த ஆண்டு இந்தப் படத்தின் ரீமேக் பணிகள் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

 
Our Score