நடிகை ஆண்ட்ரியா ‘பிசாசு-2’ படத்தில் நிர்வாணக் காட்சிகளில் நடித்திருக்கிறாரா..?

நடிகை ஆண்ட்ரியா ‘பிசாசு-2’ படத்தில் நிர்வாணக் காட்சிகளில் நடித்திருக்கிறாரா..?

இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிசாசு-2’ படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக சில காட்சிகளில் நடித்திருக்கிறார் என்று கடந்த ஒரு மாத காலமாகவே வதந்திகளாக செய்திகள் பரவி வந்தன.

இது பற்றி ஆண்ட்ரியாவிடம் அவருடைய சமூக வலைத்தளங்களில் கேள்விகள் கேட்டபோதும் பதில் சொல்லவில்லை. இதேபோல் ‘பிசாசு-2’ படம் பற்றி இயக்குநர் மிஷ்கின் சமீபத்தில் ரசிகர்களிடத்தில் உரையாடுகையிலும் இதே கேள்வியை அவர்களும் மிஷ்கினிடம் கேட்டார்கள். அப்போது மிஷ்கினும் அது பற்றி எதுவும் பேசாமல் நழுவிவிட்டார்.

ஆனால் படத்தில் 15 நிமிடங்கள் கொண்ட ஒரு காட்சியில் ஆண்ட்ரியா முழு நிர்வாணமாக நடித்திருக்கிறாராம். இதற்காக அவருக்கு அதிகச் சம்பளமும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று படத்துடன் தொடர்புடைய சிலர் கூறுகின்றனர்.

இப்போது ஆண்ட்ரியாவின் நிர்வாணக் காட்சியைக் கொண்ட போஸ்ட் டிஸைன் ஒன்றும் போஸ்டர்-2 படத்திற்காக உருவாக்கப்பட்டு இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இது இயக்குநரே உருவாக்கிய போஸ்டரா.. அல்லது வேறு யாராவது உருவாக்கியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் இது ஆண்ட்ரியாதான் என்பதை மட்டும் அடித்துச் சொல்கிறார்கள்.

ஆக, ‘பிசாசு-2’ படத்திற்கு வேறு எந்த விளம்பரமும் தேவையில்லை.. இது ஒன்றே போதும்..!!!

Our Score