full screen background image

‘ஆர்.கே.வெள்ளிமேகம்’ திரைப்படம் ஜூலை 12-ம் தேதி வெளியாகிறது!

‘ஆர்.கே.வெள்ளிமேகம்’ திரைப்படம் ஜூலை 12-ம் தேதி வெளியாகிறது!

கதையாழத்துடன் கூடிய மலையாளப் படங்கள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் வெளியாகி பெரியளவில் வசூல் குவித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், மலையாள திரையுலகிலிருந்து ஒரு குழு தமிழில் ‘ஆர்.கே.வெள்ளி மேகம்’ என்ற பெயரில் படமெடுத்து, அதை வெளியிடுவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

மலையாளத்தில் ஐந்து படங்களை இயக்கியுள்ள இயக்குநர் சைனு சாவக்கடன், ஆறாவது படமாக சைக்கோ திரில்லர் சப்ஜெக்டில், கமர்ஷியல் அம்சங்களுடன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

படத்தில் விஜய் கௌரீஷ், ரூபேஷ் பாபு, சுனில் அரவிந்த், சுப்பிரமணியபுரம் விசித்திரன், அதிரா முரளி, சார்மிளா, வின்சென்ட் ராய் தமிழ்ப் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் பரிச்சயமான கொட்டாச்சி, சின்ராசு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் கதையை யதுகிருஷ்ணன் எழுத, கோவை பாலு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இசை – சாய்பாலன், பாடல்கள் – அஜூ சஜன், ஒளிப்பதிவு – டோன்ஸ் அலெக்ஸ், படத் தொகுப்பு – ஹரி ஜி நாயர், பத்திரிக்கை தொடர்பு – பி.மணிகண்டன்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் சைனு சாவக்கடன் பேசியபோது, “சினிமாவுக்குள்ள சினிமாங்கிறதுதான் படத்தோட கதைக் களம். ரெண்டு இளைஞர்கள் சினிமா ஆசையில சென்னைக்கு வந்து வாய்ப்புகளுக்காக முயற்சி பண்றாங்க. அதுல அவங்க சந்திக்கிற விஷயங்களை, எதிர்பாராத திருப்பங்களோடு, சஸ்பென்ஸோடு கொடுத்திருக்கோம். அதுக்கு மேல இப்போ கதையை சொல்ல முடியாது. படம் பார்த்து தெரிஞ்சுக்குங்க. படம் நிச்சயம் எல்லாருக்கும் பிடிக்கும்” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் பேசியபோது, ”இது திரில்லர் படம்னாலும் குடும்பக் கதையை மையமா வெச்சுத்தான் எடுத்திருக்கோம். படத்தை முழுசா பார்த்தாத்தான் கதை புரியும். அந்தளவுக்கு கிளைமாக்ஸ்வரை சஸ்பென்ஸ் இருக்கு. நாலு பாட்டு, சண்டைக் காட்சிகள்னு கமர்ஷியல் அம்சங்களும், ஹியூமரும் இருக்கு. இயக்குநரும் மற்ற டெக்னிஷியன்களும் மலையாள சினிமா ஃபீல்டுல இருக்குறவங்கன்னாலும் படத்துல நிறைய தமிழ் நடிகர்கள், நடிகைகளும் நடிச்சிருக்காங்க…” என்றார்.

இத்திரைப்படம் ஜூலை 12-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது..!

 

Our Score